districts

img

மருந்தாளுநர் காலியிடங்களை நிரப்பிடுக

ஈரோடு, ஜூலை 30- மக்களை தேடி மருத்து வம் திட்டத்தில் மருந்தாளு நர்களே மருந்துகளை விநி யோகம் செய்ய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தமிழ் நாடு அனைத்துவகை மருந் தாளுநர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோடு, கூடலிங்கம் திடலில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.ரோசாரியோ  தலைமை வகித்தார். எம்.வி.சரவணன் வர வேற்றார். மாநிலச் செயலாளர் கே.ஏ.பசுபதி, தலைமை மருந்தாளுநர் ஏ.சரவணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செய லாளர் க.இளங்கோ தொடக்க உரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி.விஜயமனோகரன், தமிழ்நாடு மருத்துவ ஆய் வக நுட்பநர் சங்கத்தின் மாவட்டப் பொருளா ளர் சண்முகம், இந்திய முறை மருத்துவ  பணி யாளர் சங்க மாவட்டச் செயலாளர் சந்திர மௌலி மற்றும் எம்ஆர்பி செவிலியர் மேம் பாட்டு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.சசி கலா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  காலியாக உள்ள மருந்தாளுநர் பணியி டங்களை நிரப்ப வேண்டும். மருந்தாளுநர் களுக்கு கூடுதலாக 3 கட்ட பதவி உயர்வு  வழங்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்கா ணிப்பாளர் பணியிடம் உருவாக்கப்பட வேண் டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்க ளுக்கும் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் தலைமை மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும். மக்களை தேடி மருத் துவம் திட்டத்தில் மருந்தாளுநர்களே மருந்து களை விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  புதிய மாவட்ட தலைவராக ச.ரோசா ரியோ, செயலாளராக எம்.வி.சரவணன், பொரு ளாளராக ஏ.பி.மணிவண்ணன், துணைத்தலை வர்களாக கதிர்வேல். செந்தில் பிரியம்,  துணைச்செயலாளர்களாக ஜெகதீஸ்வரி, சீரங்காயம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். முடிவில், மாநிலத் தலைவர் வே. விஜயகுமரன் நிறைவுரையாற்றினார். பொரு ளாளர் நன்றி கூறினார்.