districts

img

நிலம் கொடுத்த விவசாயிகள் நிவாரணம் பெற போராட்டம் மட்டுமே தீர்வு - பெ.சண்முகம்

கோவை, பிப்.22- பாரதியார் பல்கலைக்கழகத் திற்கு நிலம் வழங்கிய விவசாயி கள் உரிய இழப்பீட்டை பெறுவ தற்கு அரசு அலட்சியப்படுத்தும் நிலையில், தொடர் போராட்டம் ஒன்றே தீர்வை எட்டும் சிபிஎம்  மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்  விவசாயிகளிடம் தெரிவித்தார். கோவையில் உள்ள பாரதியார்  பல்கலைக்கழகத்திற்கு 40 ஆண்டு களுக்கு முன்னால் அப்பகுதி விவ சாயிகளிடமிருந்து, சுமார் 900 ஏக் கர் நிலத்தை கையகப்படுத்தியது. ஆனால், அதற்கான உரிய தொகை யும், இழப்பீட்டும் கொடுக்கவில்லை.  அந்த இழப்பீட்டு தொகையை வழங்க கோரி கடந்த 40 ஆண்டு களாக நிலம் கொடுத்த உரிமையா ளர்கள் போராடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு  மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அத னைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடை பெற்று வந்தது. இந்நிலையில், உரிய இழப்பீட்டை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் தெரி வித்தது. ஆனால், இதுவரை இழப் பீட்டு கொடுப்பதற்கான நடவடிக்கை களை தமிழ்நாடு அரசு மேற் கொள்ளவில்லை.  இந்நிலையில், பாரதியார் பல் கலைக்கழக நிலம்  கையகப்படுத்தி யதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு  அலுவலகத்திற்கு வந்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் தங்கள் கோரிக்கையை வைத்தனர். இக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப் பினர்கள் வி.ஆர்.பழனிச்சாமி, என். ஆறுச்சாமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.  முன்னதாக, விவசாயிகள்  மத்தியில் சிபிஎம் மாநிலச்செயலா ளர் பெ.சண்முகம் பேசுகையில், பாரதியார் பல்கலைகழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய  இழப்பீடு வழங்க வேண்டும் என  அப்போதைய உயர் கல்வித்துறை  அமைச்சராக இருந்த பொன் முடியை சந்தித்து பேசினோம். அப்போது இழப்பீட்டு தொகையான ரூ.400 கோடிக்கு நான் எங்கு போவேன். துறையில் அவ்வளவு பணமே இல்லை என கூறினார். அப்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 450 ஏக்கர் நிலத்தை இலவசமாக வைத்துக் கொள்ளுங்கள், பயன்படாமல் உள்ள 500 ஏக்கரை மீண்டும் விவ சாயிகளுக்கு திருப்பி கொடுத்து விடுங்கள் என கூறினோம். ஆனால்  அதுவும் முடியாது என கூறிவிட்ட னர். மேலும், அமைச்சர் முதல்வரை  சந்தித்து பேச கூறினார். அதை  தொடர்ந்து மறுநாளே நாங்கள் சென்று முதல்வரை நேரில் சந்தித்து  மனுவாகவும் அளித்தோம். இந்த மனு அளித்து ஒரு வருடம் ஆகி விட்டது. இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கமில்லை. இதற்கு  ஒரே தீர்வு போராட்டம் தான். பாதிக்கப்பட்டவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் தான் நீதியை பெற முடியும் என்றார்.  இது குறித்து பேசிய பாதிக்கப் பட்ட விவசாயிகள் கூறியதாவது, பாரதியார் பல்கலைகழகத்திற்கு நிலம் வழங்கியவர்களில் சிலர் இறந்து விட்டனர். அவர்களது வாரிசுகளுக்காகவது இழப்பீட்டு தொகை கிடைக்க வேண்டும், அடுத்த கட்டப் போராட்டத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம். உட னடியாக தமிழக அரசு எங்களுக்கு  வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்  அல்லது தற்போது பயன்பாட்டில்  உள்ள 450 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்டு பயன்படுத்தாமல் உள்ள  சுமார் 500 ஏக்கர் நிலத்தை எங்க ளுக்கே திருப்பிக் கொடுக்க வேண் டும் என தெரிவித்தனர்.