districts

img

விவசாயிகள் சங்க போராட்டம் வெற்றி

சேலம், அக்.6- பாதை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சனை களை முன்வைத்து வாழப்பாடியில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் காத்திருக்கும் போராட்டம் வெற்றியடைந்துள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், கவர் கல்பட்டி, சென்றாயன்பாளையம், சேஷன் சாவடி, வி.மன்னார்பாளையம், எம்.பெருமா பாளையம் பகுதியில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் சார்பில் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு இரண்டு நாட்கள் விவசாயிகள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் வட்டாட்சியர் உடனே  நடவடிக்கையில் இறங்கி நடவடிக்கை மேற் கொண்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. சம்மந்தப்பட்ட எம்.பெருமாபாளையம் பகுதி யில் அதிகாரிகளை அனுப்பி அளவீடு செய் தார். மீதி ஊர் பிரச்சனைகளை ஓரிரு வாரத் தில் நிறைவேற்றிவதாக வாக்குறுதி அளித் தார். அதனைத்தொடர்ந்து போராட்டம் நிறை வுற்றது. முன்னதாக, இப்போராட்டத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் வி.பழனிமுத்து தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட் டத் தலைவர் ஏ.அன்பழகன், மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, சிபிஎம் வட்ட செய லாளர் வி.தங்கவேல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.