districts

img

இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிப்.3 ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல்

ஈரோடு, ஜன.30- ஈரோடு கிழக்கு இடைத்தேர் தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3 ஆம் தேதியன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ல் நடைபெறுகிறது. திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வன் போட்டியிடுகிறார். ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனின் வெற்றியை உறுதி செய்ய திமுக வின் அமைச்சர்கள் உள்ளிட்ட 31 பேர்  கொண்ட தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டு, வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு பெருந்துறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில் கூட்டணி கட்சி தலைவர்களு டன் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.ராமசந்திரன், சு. முத்துசாமி, வேட்பாளர் ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுரா மன், கே.துரைராஜ் உள்ளிட்ட கூட் டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாங் கள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு  சேகரித்து வருகிறோம். பொதுக்கூட்டங்கள் நடத்துவதை விட இது சிறந்த வழியாகும். முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறார். அதனைக்கூறி வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டுள்ளோம். பிப்ரவரி 3 ஆம் தேதி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனு தாக் கல் செய்கிறார். நிச்சயமாக எங்கள் வேட்பா ளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெறுவார், என்றார்.

;