districts

img

வாலிபர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

கோவை, ஜன.16- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சனியன்று சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி கள் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இருகூர் கிளையின் சார்பில் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் சூலூர் ஒன்றிய செயலா ளர் சந்திரன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே. எஸ்.கனகராஜ், மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்முகம், சுப்பிரமணியம் மற்றும் லலிதாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.