districts

புலம் பெயர்ந்த தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண சம வேலைக்கு சம ஊதியம்: சிஐடியு வலியுறுத்தல்

திருப்பூர், ஜன.31- புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்ச னைக்கு தீர்வு காண சம வேலை சம  வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட திட்டவட்ட மான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சிஐடியு வலியு றுத்தி உள்ளது. சிஐடியு திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்ட பொருளாளரும், பனி யன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) பொதுச் செயலாளருமான ஜி. சம்பத் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது: திருப்பூரில் கடந்த சில நாட்களாக காட்சி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களி லும் இந்தி தொழிலாளர்கள், தமிழ் தொழிலா ளர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சி பரப்பப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் ஜனவரி 14 அன்று நடந்த சம்ப வத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுத்து பொது அமைதியை பாது காக்க வேண்டும் என சிஐடியு கேட்டுக் கொள் கிறது. மேலும், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பனியன் தொழில் சரிவை சந் தித்து வருகிறது. பனியன் தொழிலில் ஏற்பட் டுள்ள பாதிப்பு காரணமாக, ஏற்கனவே வேலை வாய்ப்பு பெற்று வந்த, கணிசமான தமிழக  தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இத்தகைய சூழலை பயன்படுத்திக் கொண்டு வடமாநில தொழிலாளர்களால் தான் நமக்கு வேலை இல்லை என்ற விஷமத்தனமான கருத்தை சிலர் உள்நோக்கத்தோடு திட்ட மிட்டு பரப்புகிறார்கள். இதனால் திருப்பூர் மாவட்டத்தின் தொழில் அமைதிக்கு பாதிப்பு  ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சில திட்டவட்டமான முடிவு களை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே அனைத்து தொழிலாளர்களின் நலனையும், பொது அமைதியையும் பாதுகாக்க முடி யும் என்று கருதுகிறோம்.

என்ன செய்ய வேண்டும்?

குறிப்பாக, பனியன் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டுத் தொழிலாளர் களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும். வேலை குறை யும் போது சீனியாரிட்டி அடிப்படையில் வேலை தர வேண்டும். அனைத்து நிறுவனங்க ளிலும்  சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்படி யான சம வேலை நேரம் என்பதை உறுதிப் படுத்த வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம் 1979-ஐ  அமலாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த சட்டத்தை பின்பற்றா மல் செயல்படும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் நலிவடைந்து வேலை வாய்ப்பு குறையும் போது ஏற்கனவே வேலையில் உள்ள தொழி லாளர்களை வேலை நீக்கம் செய்து விட்டு புதிய தொழிலாளர்களை பணி அமர்த்து வதை தொழில் நிறுவனங்கள் செய்யக்கூ டாது. பனியன் தொழிற்சங்கங்களுடன் உற் பத்தியாளர்கள் செய்து கொண்டுள்ள ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய  நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம்  உடன டியாக மேற்கொள்ள வேண்டும் என சிஐடியு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

;