districts

img

மாவட்டங்களில் ஜவுளி சந்தைகள்: விசைத்தறித் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல், ஆகஸ்ட் 28  பாரம்பரியமான விசைத்தறி தொழிலை பாதுகாத்திடவும், தொழிலா ளர்களுக்கு பாதுகாப்பு கிடைத்திடவும், அந்தந்த மாவட்டங்களில் ஜவுளி சந் தைகள் அமைக்க வேண்டும் என விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தின் சம் மேளனம் வலியுறுத்தி உள்ளது.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் பெரிய காடு தனியார் மண்டபத் தில் தமிழ்நாடு விசைத்தறித் தொழிலா ளர் மாநில சம்மேளன  கூட்டம் புதனன்று  நடைபெற்றது. இதில், ஒன்றிய அரசின் கார்ப்ரேட் ஆதரவு கொள்கையால், தமிழகத்தில் விசைத்தறி தொழில் கடும் நெருக்கடி யில் உள்ளது. 30 சதவித தொழிலாளர் கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ள னர். உற்பத்தியான சரக்குகள் தேக்கம்  அடைந்து மக்களிடம் வாங்கும், சக்தி யும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலை பாதுகாக்க ஒன் றிய பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப் படாததால், விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்களும் தொழில் சார்ந்து உள்ளவர் களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந் நிலையில், தமிழக அரசும் மின் கட்ட ணத்தை உயர்த்தி கடும் சுமையை ஏற்ப டுத்தியுள்ளது. எனவே, பாரம்பரியமான  விசைத்தறி தொழிலை பாதுகாத்திட வும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கிடைத்திடவும், ஒன்றிய, மாநில அரசு கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். தொழிலாளர்கள் தினசரி 12 மணி  நேரம் வேலை செய்தும், நிம்மதியாக வாழ முடியாமல் கந்து வட்டிக்கு கடன்  வாங்கி திரும்ப கட்ட முடியாமல் தற் கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் ஜவுளி சந்தைகள் அமைக்க வேண் டும் என சம்மேளன கூட்டத்தில் வலியு றுத்தப்பட்டது. மேலும், மேற்கண்ட கோரிக்கை களை முன்வைத்து தொடர் இயக்கங் களை மேற்கொள்வது, விசைத்தறி தொழிலை பாதுகாக்க தொடர்ந்து சங்க  அமைப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  முன்னதாக சம்மேளன கூட்டத்திற்கு  மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமை தாங்கினார். அறிக்கையை சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.சந்திரன் முன்வைத்தார். தமிழ்நாடு  விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மே ளனப் பொருளாளர் எம்.அசோகன், சிஐ டியு மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.வேலுச்சாமி, சி.முருகேசன் உள்ளிட்ட சம்மேளனக் குழு உறுப்பினர்கள் பங் கேற்றனர்.