districts

பட்டப்பகலில் குடித்துவிட்டு சாலையில் அட்டகாசம்: சமூக விரோதிகளை பிடித்துக் கொடுத்தும் விட்டுவிடும் காவல் துறையினர்

திருப்பூர், அக்.23- திருப்பூரில் நகரின் மைய பகுதியில் சமூக விரோதிகள் பொதுவெளியில் குடிப்பதும், கத் தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதும் தொடர் கதையாகி வரும் நிலையில், காவல்துறையி னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருப்பூர் அரிசி கடை வீதியில் ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய சூழ் நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் தீபா வளி பண்டிகைக்கு தேவையான பொருட் களை வாங்க கூட்டம் கூட்டமாக சென்று  கொண்டிருந்தனர். இந்நிலையில் வியாழ னன்று பட்டபகலில் அரிசி கடை வீதி சாலை களில் அமர்ந்து மது அருந்திய சிலர் அவ் வழியே செல்லும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கத்தி மற்றும் மது பாட் டிலை கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  இதை கண்ட அப்பகுதி தொழிலாளர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மது போதையில் இருந்த நபர்களை கட்டிவைத்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு புகார் அளித்த னர். இதையடுத்து காவல்துறையினர் சம் பவ இடத்திற்கு வந்து மது போதையில் இருந்த வர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர்கள் எவ்வித விசாரணையுமின்றி விட்டு விடப்பட்டனர். அவர்கள் மீண்டும் துணிச்ச லாக இதே பகுதிக்கு வந்து தங்கள் அட்டகா சங்களை தொடர்ந்தனர். குறிப்பாக வியாழக் கிழமை இரவு அவர்கள் அப்பகுதியில் குடியி ருக்கும் ஒரு வீட்டின் முன்பாக ஆடைகளை  களைந்து நிர்வாண நடனம் ஆடினர். அரிசி கடை வீதியில் இதுபோல் சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதாகவும், காவல்துறையினர் என்ன காரணத்தாலோ சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடு கின்றனர். புகார் சொல்ல கூடியவர்களையும் மிரட்டும் நடவடிக்கையிலும் காவல்துறை யினர் ஈடுபடுகின்றனர். ஏராளமான வியாபார நிறுவனங்கள் செயல் படக்கூடிய நகரின் மையமான பகுதியி லேயே இது போன்ற சமூக விரோதிகளை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் விடு வது அப்பகுதி வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காவல்துறைக்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படும் என்று அப்பகுதியினர் ஆவேசமாக தெரி விக்கின்றனர்.

;