districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஒகேனக்கல் குடிநீர் வழங்கிட கோரிக்கை

தருமபுரி, ஜூன் 24- இந்திரா நகர் அருந்ததியர் காலனிக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க  கோரி அக்கிராம மக்கள் தருமபுரி ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர்.  தருமபுரி ஒன்றியம் செட்டிகரை ஊராட்சி இந்திரா கால ணியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். பட்டி யலின சமூகத்தை சேர்ந்த இவர்கள், பெரும்பாலும் நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களின் குடியிருப்பு பகுதியில் எந்த அடிப்படை வசதி  இல்லாமல் உள்ளது.  இப்பகுதியில், சாலை வசதி, குடிநீர், கழிவுநீர் கால்வாய்  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டு மென தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில்,கடந்த சில  மாதங்களுக்கு முன்பு, இந்திரா காலனிக்கு தெருசாலை யும், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை துவக்கினர். இங்கு, ஜல்சக்தி திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்து  வந்த நிலையில், சாலை அமைக்கும் பணியின் போது குடிநீர்  குழாய் சேதமடைந்தது. இதனால் இங்கு குடிநீர் வருவ தில்லை. ஊராட்சியின் மூலம் வழங்கப்படும் தண்ணீரும் இங்கு வருவதில்லை, ஒகேனக்கல் குடிநீரும் வருவ தில்லை. சாலை அமைக்கும் போது குடிநீர் குழாய் சேதமடைந் ததால் குடிநீர் இன்றி கடந்த 2 மாதங்களாக சிரமப்பட்டு வரு கின்றனர். இம்மக்கள் குடிநீருக்காக விவசாய கிணறுகளுக்கு சென்று குடிநீர் எடுத்துவர வேண்டியுள்ளது. எனவே குடிநீர் பிரச்சனையை தீர்க்க இந்திரா கால னிக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக் கல் குடிநீர் வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியரி டம் மனு அளித்தனர்.

பட்டா இருக்கு ஆனா நிலம் இல்லை

பட்டா இருக்கு ஆனா நிலம் இல்லை ஈரோடு, ஜூன் 24- பட்டா வழங்கி, 10 ஆண்டுகள் ஆகியும் நிலம் ஒதுக்காமல்  உள்ளதால், ஏழை எளிய மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அண்ணா நகர், வடக்கு  பேட்டை பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான காலி  இடத்தை வீடற்ற ஏழைகளுக்கு கடந்த 2014இல் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.  இவ்வாறு சத்தியமங்கலம் பகுதியில் வசித்த, 30 பேருக்கு  பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. அவ்விடத்தின் ஒரு பகு தியை, சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா ரிக்கு நிலம் கையகப்படுத்தியபோது எடுத்துக் கொண்ட னர். மீதமுள்ள காலி இடத்தில் அளவீடு செய்து ஒவ்வொருவ ருக்குமான நிலத்தை பிரித்து தருவதாக கூறினர். ஆனாலும்,  இதுவரை அவ்விடத்தை அளவீடு செய்து தரவில்லை. இன் னும் சில அதிகாரிகள், அவ்விடத்துக்காக பட்டா வழங்க வில்லை; வேறு இடம் தரப்படும், என கூறுகின்றனர். இதனால், பட்டா வழங்கப்பட்ட மக்களுக்கு உரிய நிலத்தை அளவீடு செய்து வழங்க கோரி, பல முறை வட்டாட்சி யர், வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித  முன்னேற்றமும் இல்லை. எனவே பட்டா பெற்று, நிலம் கிடைக்காமல் பாதிக்கப் பட்ட பெண்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை  அளவீடு செய்து, வழங்க வேண்டும், என வலியுறுத்தி குறைதீர்  கூட்டத்தில் மனு அளித்தனர்.

உழவர் சந்தைகளில் காய்கறிகள்  ரூ.26.57 லட்சத்திற்கு விற்பனை

உழவர் சந்தைகளில் காய்கறிகள்  ரூ.26.57 லட்சத்திற்கு விற்பனை ஈரோடு, ஜூன் 24- ஈரோட்டில் உள்ள 6 உழவர் சந்தைகளுக்கு வரத்தான  66.63 டன்காய்கறிகள் ரூ.26.57 லட்சத்திற்கு விற்பனை யானது.  ஈரோடு மாவட்டத்தில், சம்பத் நகர், பெரியார் நகர், பெருந் துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்க ளில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், காய்கறிகளை வாங்க அதிகாலை முதலே மக்களும் அதிகளவில் வந்திருந்தனா். இதில், சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 25.60 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.10 லட்சத்து 31 ஆயிரத்து 834க்கும், மாவட்டத் தில் உள்ள 6 உழவர் சந்தைகளுக்கும் வரத்தான 66.63 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.26 லட்சத்து 57 ஆயிரத்து 950க்கும் விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கோவை, ஜூன் 24- கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், சிங்கப்பூா், ஷாா்ஜா வுக்கும் நாள்தோறும் 35 - க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், இங்கு எப்போதும் அதிக அளவிலான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத் திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதோடு, நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டு இருந்தது. தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அது வதந்தி என்பது தெரியவந்தது. இதனையடுத்து, திங்களன்று காலை 7.30 மணி அளவில் மின்னஞ்சல் மூலம் கோவை விமான நிலையத்தில் வெடி குண்டு வைத்து உள்ளதாக மிரட்டல் வந்து உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, விமான நிலையம் முழுவதும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய்ப் பிரிவு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலி ழப்பு படையினர் ஆகியோருடன் கோவை மாநகர போலீசாரும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடு  பட்டனர்.

ரூ.1.20 கோடிக்கு மஞ்சள் விற்பனை

ரூ.1.20 கோடிக்கு மஞ்சள் விற்பனை நாமக்கல், ஜூன் 24- திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட் டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.1.20 கோடிக்கு மஞ்சள் ஏலம்  நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற் பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமைய கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடர்பாளையம் சோழ சிராமணி, இறையமங்கலம், சங்ககிரி, எடப்பாடி, கொளத் தூர், ஓமலூர், அரூர், பொம்மிடி, ஊத்தங்கரை, கொடுமுடி  பாசூர், அந்தியூர், துறையூர் தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய  பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளை கொண்டு வந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.14,012  முதல் ரூ.18,759 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.13,112 முதல்  ரூ.16,219 வரையிலும், பனங்காளி ரூ.15,000 முதல் ரூ.22,869 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1405 மஞ்சள் மூட் டைகள், ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது.

கால்வாயில் விழுந்த குட்டி யானை மீட்பு

கால்வாயில் விழுந்த குட்டி யானை மீட்பு உதகை, ஜூன் 24- கால்வாயில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறை யினர் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அப்பர்  கார்குடி அருகே, பிறந்து சில தினங்களையான குட்டி யானை  ஞாயிறன்று தாயுடன் உலா வந்தது. இந்நிலையில், பிற்பகல் குட்டி யானை, எதிர்பாராமல் அப் பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து. வெளியே வர  முடியாமல் தவித்து கொண்டிருந்ததை பார்த்த தாய் யானை  பிளிறி கொண்டு இருந்தது. இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் தாய் யானையை அங்கிருந்து விரட்டி னர். பின்பு சுமார் 2 மணி நேரம் போராட்டதிற்கு பிறகு,  கால்வாயில் இருந்த அந்த குட்டி யானையை வனத்துறையி னர் மீட்டனர்.

சாலையை சீரமைக்க கோரி மறியல்

உதகை, ஜூன் 24- குண்டும் குழியுமாக உள்ள சாலையை  சீரமைத்திடக்கோரி உதகையில் பொதுமக் கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 31,33 மற்றும் 34  ஆகிய வார்டுகளில் 800-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாம்பே கேசில், எச்.எம்.டி., சாலை மற்றும்  வார்டு பகுதிகளுக்கு செல்லும் சீரமைத்து பல  ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே பெயர்ந் துள்ளது. மேற்கண்ட சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது. சாலை மோசமானதால் அப்பகு திக்கு வாடகை வாகனங்கள் வர மறுக்கின்ற னர். சாலையை சீரமைத்து தரக் கோரி அப் பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்தி டம் கோரிக்கை வைத்தனர். நகராட்சி நிர்வா கம் கண்டு கொள்ளவில்லை.  இதனையடுத்து, அப்பகுதி மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்ட இடத்திற்கு வந்த  போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனை வரும் கலைந்து சென்றனர்.

கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு, ஜூன் 24- கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளி யேற்றிய நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி, ஒண்டிக்காரன்பாளையம் ஆகிய பகுதியில் குடியிருப்புகளில் கடந்த ஒரு வாரமாக ஆழ் துளை கிணற்றில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் தண்ணீர் வந்தது. அந்நீர் துர்நாற்றம் வீசுவதாகவும், குடிக்க பயன்படுத்த முடியாத தாகவும் இருந்தது. இதுபற்றி மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர்  மேற்கண்ட பகுதியில் வீடு களிலும், அதனை சுற்றியுள்ள சாய, சலவை, பிரிண்டிங் ஆலைகளிலும் சோதனை நடத்தினர். இச்சோதனையில், வில்லரசம்பட்டி பகுதியில் பிரிண்டிங் ஆலை கழிவு நீரை சுத்தி கரிப்பு செய்யாமல் வெளியேற்றியது கண் டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென் னையில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பிய நிலையில் அந்த அலுவலக உத்தரவுப்படி பிரிண்டிங் ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  ஒண்டிக்காரன்பாளை யம் பகுதியில் உள்ள ஆலைகளிலும் இது போன்ற ஆய்வு நடைபெற்று வருகிறது.