districts

img

மாற்றுத்திறனாளி ஆசிரியை தர்ணா

பள்ளிபாளையம், ஜன.31- மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் குமரபாளையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே  உள்ள கத் தேரி, சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா. மாற்றுத் திறனாளி. ஆசிரியர் பயிற்சியில், டிப்ளோமோ படித்த நிலை யில், கடந்த 2013-இல் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியராக பணி யாற்றி வந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக பள்ளிக்கு வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் பள்ளி யில் ஒப்படைத்த தனது ஆசிரியர் படிப்பு சான்றிதழை தரா மல் இழுத்தடித்து வருகிறது. இந்நிலையில், மாற்றுத்திற னாளி ஆசிரியை சுதா, பள்ளியின் வெளியே,  கோரிக்கை பாதா கைகளை ஏந்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. சுதாவிற்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தை சேர்ந்த நிர் வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வருவாய்த் துறையினர், காவல் துறையினர் சுதாவிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். பள்ளி நிர்வாகிகளிடம்  பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஆசிரியை சுதாவின் சான்றிதழ் காணாமல் போய்விட்டதால், விரைவில் ஆன்லைன் மூல மாக, ஆசிரியை சுதாவின் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இத னையடுத்து போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.

;