districts

img

நகராட்சி ஊழியர்களை மிரட்டும் துணைத் தலைவரின் கணவர்

அவிநாசி, ஜன.31- திருமுருகன்பூண்டி நகர மன்ற துணைத் தலைவரின் கணவர், ஊழியர்களை மிரட்டும் தொனியில் நடப்பதாக நகராட்சி ஆணையர் குற்றஞ்சாட்டியுள்ளார். திருமுருகன்பூண்டி நகரமன்ற கூட்டம், தலைவர் குமார் தலைமை யிலும், நகராட்சி ஆணை யர் அப்துல் ஹாரிஸ் முன்னிலை யில் நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருமுருகன் பூண்டி 10 ஆவது வார்டு உறுப்பினர் சுப்பிர மணியம் பேசுகையில், திட கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் பணிகளை தனி யார்க்கு ஒப்பந்தம் அளிப்பதால், கூடுதலாக ஒரு கோடி ரூபாய் செல வாகும். அதுமட்டுமின்றி ஊழியர் களின் தினசரி வேலை என்பது கேள்விக்குறியாக்கப்படும். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும். காலியிடங்கள், புதிய வீடுகளுக்கு வரிவிதிப்பது, பெயர் மாற்றத்திற்கு உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிர்ண யித்த தொகையை விட அதிகமாக வசூலித்து வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும். கொசு மருந்து  தெளிப்பதை முறைப்படுத்த வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை களை நிறைவேற்ற நகராட்சி அலுவ லகத்தில் பெட்டியில் இடப்படும் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  14 ஆவது வார்டு உறுப்பினர் தேவ ராஜன் பேசுகையில்,  பொதுமக்கள்  அளித்த மனுக்களை புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது. இம்மனுக்களில் உள்ள  பிரச்சனைகளுக்கு தீர்வு காணப் பட்டுள்ளதா என நகர மன்ற தலைவர்  தலைமையில் குழு அமைக்கப் பட்டு விவாதிக்கப்படலாம்? என வினாவினர். 

மேலும், உமையஞ்செட்டி பாளையம் அருகே சாலை அமைக்க  100 மீட்டருக்கு ரூ.6 ¾ லட்சம் மதிப்பீடு செய்துள்ளீர்கள். அதேபோல பாலம் அமைப்பதற்கும், சிமெண்ட் குழாய் பதிப்பதற்கும் ரூ.4 3/4 லட்சம் மதிப்பீடு செய்துள்ளீர்கள், இம்மதிப்பீடு அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.  இதுகுறித்து நகர மன்ற தலைவர்  குமார்,  இன்ஜினியரிடம் மீண்டும்  மதிப்பீடு செய்ய உத்தரவிடலாம் என  தெரிவித்தார்.  இதன்பின் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 22 ஆவது  வார்டு நகர மன்ற உறுப்பினர் பார்வதி  பேசுகையில், அகில் நகர் பகுதியில்  பூங்கா அமைத்து தர வேண்டும். பழுதடைந்த பொதுக் கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும். பெருமாள் கோயில் பகுதியில் உள்ள சாலை யை சீர்மைக்க வேண்டும் என தெரி வித்தார்.

இதைத்தொடர்ந்து நகர மன்ற துணைத் தலைவர் ராஜேஸ்வரி பேசு கையில், அனைத்து கட்சி நிர்வாகி களும் நகராட்சி அலுவலகத்திற்கு வருகிறார்கள். ஆனால் என் கணவர்  மட்டும் வரக்கூடாது என நகர மன்ற  ஆணையர் தெரிவிக்கிறார் எனக் கூறினார்.  இதுகுறித்து நகராட்சி ஆணை யர்,  அனைவரும் நகராட்சி அலுவல கத்திற்கு வரலாம், என்னிடம் குறை களை கூறலாம். ஆனால் நகர மன்ற  துணைத் தலைவரின் கணவர் நக ராட்சியில் பணியாற்றுகிற ஊழியர் களை மிரட்டும் தொனியில் பேசி வரு கிறார். இதனால்தான் அவரை வர வேண்டாம் என்று கூறினேன். எந்தப்  பிரச்சனையாக இருந்தாலும் நக ராட்சி ஆணையர் என்கிற முறையில்  என்னிடம் தெரிவிக்க வேண்டும் தெரி வித்தார்.  அதிமுகவை சேர்ந்த 4ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கார்த்தி கேயன், துணைத் தலைவரின் கணவர் நகராட்சி அலுவலகத்திற்கு வருவதில் என்ன தவறு என கேட் டார்.  இதற்கு ஆணையர்,   துணைத் தலைவரின் கணவர் என்ற முறையில்  நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்து வது தான் வேண்டாம் என்றார். இதன் காரணமாக நகர மன்ற கூட்டம்  பரபரப்பாக காணப்பட்டது. 

;