திருப்பூர், ஜன.5- திருப்பூர் மாநகராட்சி எல்லை யில் நஞ்சராயன் குளத்தின் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து கால்பந் தாட்ட மைதானம் அமைத்திருப்ப தாக விகாஸ் சேவா டிரஸ்ட்டை கண்டித்து நஞ்சராயன் குளம் பாது காப்பு இயக்கத்தினர் திருப்பூர்- ஊத்துக்குளி சாலை கூலிபாளையம் நால் ரோட்டில் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகர எல்லையில் ஊத்துக்குளி வட்டத்தில் 800 ஆண்டு கள் பழமை வாய்ந்த மிகப்பெரிய ஏரி, 440 ஏக்கர் பரப்பளவு கொண்ட நஞ்சராயன் குளம் ஆகும். இதன் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து குளத்திற்கு அருகில் இயங்கி வரும் விகாஸ் வித்யாலயா பள்ளியை நடத்திவரும் விகாஸ் சேவா டிரஸ்ட், குளக்கரையில் இருந்து சாலை வரை நீர்வழிப்பாதையை மறித்து கட்டு மான பணிகளை செய்து வந்தது. நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட் டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி, நில விற்பனையில் நடந்துள்ள ஊழல் குறித்து விசாரிக்க கோரி நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக போராட் டங்களும் நடைபெற்று வந்தன. இந் நிலையில் விகாஸ் வித்யாலயா பள்ளியின் சார்பில் நீர்வழிப் பாதை யில் கட்டப்பட்டுள்ள கால்பந்தாட்ட மைதானம் திறப்பு விழா புதனன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கால்பந்தாட்ட மைதானம் திறப்பு விழா நடைபெற உள்ள இடத்தில் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்த நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்தனர். எனினும் இப்போராட்டத் திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதையடுத்து இந்த இடத் திற்குச் சற்று தொலைவில், கூலி பாளையம் நால் ரோட்டில் புதனன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எந்தவித அனுமதி யுமின்றி நீர்வழிப்பாதையை ஆக்கி ரமித்து கால்பந்து மைதானம் அமைத் துள்ள விகாஸ் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கால் பந்தாட்ட மைதானத்தை அகற்றக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப் பட்டன. மேலும்,நஞ்சராயன் குளத்தை பாதுகாக்கவும், அதன் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் ஈசன் தெரிவித்தார்.