நாமக்கல், பிப்.26- ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் இட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் தற் போது செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்க ளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின் றன. இந்நிலையில், தற்போதுள்ள பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலை வில் தமிழக அரசு புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆணை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் தொடர்ச்சியாக பல்வேறு கட்டமாக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில், ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்ட மைப்பு சார்பில் செவ்வாயன்று, பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அதில், பேருந்து நிலையத்தை இடமாற் றும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு ஆதாயம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது. விவ சாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனத் திற்காக நஞ்சை விவசாய நிலங்களை வகைப் பாடு மாற்றிய வருவாய் துறையினர் மீது விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், உளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, அதிமுக நகரச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணிய, மாவட்ட அவைத் தலைவர் நா.ஜோதிபாசு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் வி.சேதுராமன், பாமக மாவட்டச் செயலாளர் ஒ.பொன்னுசாமி உட் பட பலர் கலந்து கொண்டனர்.