districts

img

மலைவாழ் மக்களை நிலத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி

சேலம், பிப்.21- பல தலைமுறையாக அனுபவ நிலத்தில் வசித்து வரும் மலைவாழ் மக்களை நில வெளியேற்றம் செய்ய முயற்சிக்கும் வனத் துறையினரைக் கண்டித்து, மலைவாழ் மக் கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். வன உரிமை சட்டத்தை மதிக்காத சேலம் மாவட்டம், தும்பல் ரேஞ்சர் விமல் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பல தலை முறைகளாக அனுபவ நிலத்தில் வசித்து வரும் நெய்யமலை, பெரிய குட்டி மடுவு, சின்ன குட்டி மடுவு, கீரைப்பட்டி பகுதி மலை வாழ் மக்களை நில வெளியேற்றம் செய்ய நோட்டீஸ் கொடுத்து அச்சுறுத்தும் நடவடிக் கையை கைவிட வேண்டும். காட்டெருமை தாக்கி உயிரிழந்த கால்நடைகளுக்கு ஆறு மாதமாகியும் நிவாரணம் கிடைக்காமல் உள்ள நிலையில், உடனடியாக வனத்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின பெண்களை அச்சுறுத்தும் நோக்கில் செயல் படும் தும்பல் வனத்துறையினர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். இலவச மரக் கன்றுகளுக்கு அப்பாவி மலைவாழ் மக்களி டம் பணம் பறிக்கும் வாச்சர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். 2018 முதல் 2025 வரை கொடுத்த வன உரிமை மனுக்களை பரிசீலிக்காமல், கிடப்பில் உள்ள நிலையில், அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மலைவாழ் மக்கள்  சங்க மாநிலப் பொருளாளர் ஏ.பொன்னுசாமி  தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநி லத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப் பினருமான பி.டில்லிபாபு, மாநில துணைத் தலைவர் வி.சின்னமணி, மாநிலக்குழு உறுப் பினர் என்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் ஏ.அன் பழகன், காபி தொழிலாளர் சங்க பொருளா ளர் தர்மலிங்கம், சிபிஎம் வாழப்பாடி கன் வீனர் பழனிமுத்து, வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.