திருப்பூர், மார்ச் 2 - பல்லடம் சட்டமன்றத் தொகுதி திமுக இளைஞரணி ஆலோ சனைக் கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்ல டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய நகர இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அருள்புரம் ஒன்றிய திமுக அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் திருப்பூர் தங்கராஜ் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பிரச்சாரம் மேற்கொள்வது, தமிழக முதல்வரின் பிறந்த நாளை ஒரு மாத காலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடு வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜசேகரன், பல்ல டம் ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.