கோவை, பிப்.17- கோவை மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கு, ஜூம்பா நடனப்பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை குறைக்க வாரந்தோறும் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் யோகாப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் காவலர்களுக்கு உடல்சோர்வு நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுகிறது. அந்த வரிசையில் புது முயற்சியாக கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு ஜூம்பா நடனப்பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. ஜூம்பா நடனம் சுவாச பிரச்சனை, மன அழுத்தம், செரிமான பிரச்சனைகள், உடல் எடையை சீராக வைத்தல், நல்ல உறக் கம் ஆகியவற்றிற்கு நன்மை அளிக்கும் என்பதால் காவலர்க ளுக்கு இந்த நடனப்பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் நாள் வகுப்பில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில், வரும் நாட்களில் இது விரிவுபடுத்தப்பட்டு அனைத்து காவலர்களுக்கும் இந்த நடனப்பயிற்சி அளிக்கப் பட உள்ளதாக, காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரி வித்துள்ளனர்.