districts

img

பாஜகவை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உடுமலை, மார்ச் 9- திரிபுரா மாநிலத்தில் எதிர்க்கட்சியினரை தாக்கும்  பாஜக வின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் உடுமலை நகரக்குழு சார்பில் புதனன்று மத்திய  பேருந்து நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போதிய அளவில் வெற்றி பெறாமல் போனதால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்களின் வீடுகள்  மற்றும் தனி மனித தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக கட்சியின்  உடுமலை நகர செயலாளர் தண்ட பாணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் பஞ்சலிங்கம், ஆர்.வி. வடிவேல், உடுமலை நகரக் குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், தோழன்ராஜா, ஜஹாங் கீர்,வசந்தி மற்றும் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா பொறுப் பாளர் எம்.எம்.வீரப்பன், தாலுகா குழு உறுப்பினர் ராஜரத் தினம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு பிஜேபி யின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து முழக்கம்  எழுப்பினார்கள்.