districts

img

மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையை சரி செய்ய சிபிஎம் கோரிக்கை

உடுமலை, டிச.2- மடத்துக்குளத்தில் 24 மணி நேரமும்  செயல்படும் அரசு மருத்துவமனையில் அனைத்து துறைகளுக்கும் மருத்து வர்களை நியமிக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தட்டி வைத்துள்ளனர்.  உடுமலை, மடத்துக்குளம் மையப்ப குதியிலிருந்த ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி  மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, மருத்துவமனை வளா கத்தில் புதிய கட்டிடம் கட்ட 2016 ஆம்  ஆண்டு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட் டது. முதல்கட்டமாக 30 படுக்கை அறை கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி கள் துவக்கப்பட்டது. கட்டுமான பணி கள் நிறைவடைந்ததுடன், மருத்துவ உப கரணங்கள் மற்றும் இதர பொருட்கள் வாங்க தனியாக நிதி ஒதுக்கப்பட்டு கடந்த வருடம் மருத்துவமனை திறக் கப்பட்டது.

ஆனால் இன்னும் மருத்து வமனையில் துறை சார்ந்த மருத்துவர் கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் பொதுமக் கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறனர். மடத்துக்குளம் மருத்துவமனை அமைந் துள்ள  பகுதி திருப்பூர் - திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக உள் ளதால், திண்டுக்கல் மாவட்டத்தின் சாமி நாதபுரம் முதல் தாளையம் கிராமம்  வரை உள்ள மக்கள், மடத்துக்குளம் தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட மக்கள் என  தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவ தேவைகளுக்காக 20 கிலோ  மீட்டர் தொலைவில் உள்ள உடுமலை மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.  முதலில் ஆரம்பச் சுகாதார நிலை யமாக இருந்த அதே கட்டிடத்தில் தான்  புதிய மருத்துவமனையை ஆரம்பித் தார்கள். ஆனால் இப்போதும் ஆரம்பச்  சுகாதார நிலையம் போல் தான் உள்ளது.  விரிவு படுத்தப்பட்ட மருத்துவமனைக் குக் குறைத்த பட்சம் எட்டு மருத்துவர் கள் தேவை. ஆனால் தற்போது மூன்று மருத்துவர்கள் மட்டுமே உள்ளார்கள். இதே போல் ஒரு சிப்டுக்கு குறைந்த பட்சம் எட்டு செவிலியர்கள் தேவை. தற்போது இங்கு மொத்தமாக 25 செவி லியர்கள் மட்டுமே உள்ளனர். பராம ரிப்பு ஊழியர்கள், மருந்துகள் என  மருத்துவமனைக்கு என்று எவ்வித  அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. மக்களின்  நலனைப் பாது காக்க துவக்கப்பட்ட மருத்துவமனை யில் அனைத்து வசதிகளையும் சுகா தாரத் துறை ஏற்படுத்த வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை  வைத்துள்ளனர்.