districts

img

மதச்சார்பின்மையை பாதுகாக்காமல்

திருப்பூர், டிச. 2 – இந்தியாவில் மதச்சார்பின்மையைப் பாதுகாக்காமல் அரசியல் சட்டம் வழங்கக் கூடிய ஜனநாயக உரிமைகளை நம்மால் பாது காக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் கூறினார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு நடத்தி வரும் பத்து நாள் தொடர் வகுப்பின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை, மாவட்ட செயற்குழு உறுப் பினர் ச.நந்தகோபால் தலைமையில், “அரசி யல் சாசனமும், மதச்சார்பின்மையும், வகுப்பு வாத அச்சுறுத்தலும்” என்ற தலைப்பில் மாநி லக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் உரை யாற்றினார். அப்போது அவர் கூறுகையில், செக்யூ லரிசம் என்ற ஆங்கில வார்த்தையின் மிகச் சரியான அர்த்தத்தில், மதச்சார்பின்மை என்ற வார்த்தை துல்லியமான பொருள் உணர்த்தக் கூடியதாக இல்லை. மதச்சார்பின்மை என்ப தை பலர் பலவிதமாக விளக்கம் அளிக்கின் றனர். ஆனால் அரசு நிர்வாகம், அரசின் செயல்பாடு அனைத்து மதங்களிடம் இருந் தும் சார்பில்லாமல் இருப்பதே மதச்சார் பின்மை. அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவது மதச்சார்பின்மை என்று விளக்கம் அளிப்பதும், அதன்படி செயல்படுவதும் சரி யானதல்ல. மேலும் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கே மதச்சார்பின்மை மிகவும் அடிப்படை அவசி யம் ஆகும். மதச்சார்பின்மை இல்லாமல் ஜனநாயகம் இல்லை. மதச்சார்பி ன்மையைப் பற்றி வர்க்கரீதியான புரிதல் அவசியம். வகுப்புவாத கண்ணோட்டம் மதச் சார்பின்மையை மறுக்கிறது, நிராகரிக்கிறது. மதச்சார்பின்மை, பற்றி சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுபான்மையினர் நல னைப் பாதுகாப்பதை வகுப்புவாத நிலை யில் இருந்து, அவர்களுக்கு சலுகை காட்டு வதாகத் தவறாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படும். இந்தியாவில் கடந்த கால ஆட்சி யாளர்கள் அரசியல் சாசனத்தில் சொல்லப் பட்டிருக்கும் மதச்சார்பின்மை நிலையில் உறுதியாக நின்று செயல்படாமல் சமரசம் செய்து கொண்டதுதான் வகுப்புவாதம் வளர்வதற்கு காரணமாக உள்ளது.

மேலும், தற்போது இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் வகுப்புவாதம், இனவாதம், வெள்ளையர் உயர்மனப்பான்மை நிற வெறி என வலதுசாரி போக்குகள் அதி கரித்து அச்சுறுத்தும் நிலை உள்ளன. மதச் சார்பின்மை மீது தாக்குதல் தொடுக்கப்படு கிறது. இதற்கு மதச்சார்பின்மையை மட்டும் தனித்த்துப் பார்த்தால் போதாது. இன்றைய சர்வதேச நிதி மூலதனம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழலில், வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும், வாழ்வா தார நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. இந்த அடிப்படை மக்கள் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புவதற்கே வலதுசாரி கருத்தியல் தலை தூக்குகிறது. எனவே அரசியல் சட்டத்தில் குறிப்பி டப்பட்டுள்ள மதச்சார்பின்மை, ஜனநா யகத்தைப் பாதுகாக்க மக்களின் வாழ்வா தார நெருக்கடிக்குத் தீர்வு காணும் அரசியல் போராட்டத்தையும் இணைத்து நடத்துவது அவசியமாகும். கடந்த காலங்களில் தெலுங் கானா, தே பாகா, புன்னப்புரா வயலார் போன்ற விவசாயிகள் எழுச்சி காலத்திலும் மதவெறியைத் தூண்டி உழைக்கும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி கள் நடைபெற்றுள்ளன. ஆனால் அவற்றைத் தாண்டி மக்களின் ஒற்றுமை வெற்றி பெற்றது. எனவே மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் காப்பதற்கான மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டியது அவசியம், என்றர். இந்த  வகுப்பில் திரளானோர் கலந்து கொண்ட னர்.

;