districts

img

திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு கண்டனம்

நாமக்கல், ஜன.21- தஞ்சை திருஆரூரான் சர்க்கரை ஆலை  நிர்வாகத்தின் விவசாய விரோத நடவடிக் கையை கண்டித்தும், நியாயம் கேட்டு போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சனி யன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார் பில் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  விவசாயிகள் பெயரில் வங்கிகளில் ரூ.140 கோடி கடன் பெற்று திருஆரூரான் சர்க்கரை  ஆலை எடுத்துக் கொண்ட கடன் தொகை  தற்போது வரை விவசாயிகள் பெயரிலேயே உள்ளது. விவசாயிகள் பெயரில் உள்ள வங்கி கடனை, ஆலையை வாங்கியுள்ள கால்ஸ் நிறுவ னத்தின் பெயரில் மாற்ற வேண்டும். விவசா யிகளை ‌கடன் வலையில் இருந்து விடுவிக்க  வேண்டும். விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப் ்பட்ட பணத்தையும், பயிர் கடன் ரூ.50 கோடியை  ஆரூரான் சர்க்கரை ஆலை வாங்கியுள்ள கால்ஸ் நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஆலை தர வேண்டிய கரும்பு  பண பாக்கி முழுவதையும் வட்டியுடன் விவசா யிகளுக்கு வழங்கிட வேண்டும். தொழிலா ளர்கள், ஆலை நிர்வாக பணியாளர்களுக்கு தர வேண்டிய சம்பள பாக்கி முழுவதையும் வழங் கிட வேண்டும். ஆலையை வாங்கிய கால்ஸ் நிறு வனம் ஏற்காத பட்சத்தில் தமிழக அரசு ஆரூரான் சர்க்கரை ஆலைகளை ஏற்று நடத்திட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் கடந்த 53 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் நாடு அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்ச னைக்கு தீர்வு காண வேண்டும் என ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஏஆதிநாராயணன் தலைமையில் திருச்செங் கோடு அண்ணா சிலையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் செ.நல்லாகவுண்டர் துவக்கி வைத் தார், ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி சிபிஎம் திருச் செங்கோடு ஒன்றிய செயலாளர் ஆர்.மனோக ரன், சிஐடியு தலைவர் ஐ.ராயப்பன், வாலிபர் சங்கத்தின் நிர்வாகி ஆர்.ரவி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பெருமாள் உரையாற்றினார். தமிழ்நாடு பால்  உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஆர். முத்துசாமி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற் றனர். 

ஈரோடு

ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயி களுக்கு ஆதரவாக சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலை வர் எஸ்.வி.மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் பண்ணாரி ஆலை செய லாளர் எஸ்.முத்துசாமி, சக்தி சர்க்கரை ஆலை தலைவர் டி.பி.கோபிநாத், விவசாயிகள் சங்க  சத்தி தாலுக்கா தலைவர் பி.கணேஷ் ஆகி யோர் பேசினர். சிஐடியு மாவட்ட உதவி செயலா ளர் கே.மாரப்பன் வாழ்த்திப் பேசினார்.