கோவை, நவ.27- கோவை பந்தய சாலை காவல் நிலையம் தலைமை காவலர் அல்லிதுரைக்கு, கோவை மாநகராட்சி ஆணை யாளர் மு.பிரதாப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், காவலர் அல்லிதுரைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கோவை மாநகராட்சியின் ஆய்வு பணிக்காக அவிநாசி சாலை லட்சுமி மில் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, தாங்கள் மிகச்சிறப்பாக போக்குவரத்தை சீரமைத்தும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு தேவையான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மிக அருமையான முறையில் செய்துகொண்டி ருந்ததையும் கண்டு மகிழ்ச்சியுற்றேன். தங்களின் கடமை உணர்வுடன் கூடிய இப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள், என தெரிவித்திருந்தார். மேலும், காவல் அல்லிதுரையை மாநகராட்சி அலுவல கத்திற்கு நேரில் அழைத்து அவருக்கு பாராட்டு சான்றி தழையும் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் வழங் கினார்.