districts

img

நீச்சல் போட்டிகளில் அசத்தும் கோவை சிறுமிகள்

கோவை, ஏப்.22- கோவையை சேர்ந்த சிறுமிகள் மாநில அளவி லான நீச்சல் போட்டிகளில்  கலந்து கொண்டு திற மையை வெளிபடுத்தி வரு கின்றனர்.  கோவை, காந்திபார்க் பகுதியில் மாநகராட்சி நீச்சல் குளம் உள்ளது. தனி யார் நீச்சல் குளங்களை காட்டிலும், தரமாக பராமரிக்கப் படுகிறது. இந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் மற்றும்  பெரியவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நீச்சல் பயிற்சி  வழங்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை விடு முறையாகும். அன்றைய தினம் தண்ணீர் மாற்றப்படுகிறது.  இங்கு 3 பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு லைப் கார்டு நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று வரும் 7 வயது  சிறுமிகளான ஜானு மற்றும் ரியா ஆகியோர் மாநில, மாவட்ட   அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும்  சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். நீச்சலில் உள்ள 4 வகை களையும் கற்றுத்தேர்ந்த இச்சிறுமிகள் தனித்தனி பிரிவுகளில் கலந்து கொண்டு சாதனை படைத்து வருவதாக நீச்சல் பயிற்சி யாளர் ரகு தெரிவித்தார்.