கோவை, ஜன. 13- சரியான நேரத்திற்கு விமான சேவை வழங்கிய தர வரிசை பட்டி யலில் கோவை சர்வதேச விமான நிலையம் 13 ஆவது இடத்தை பிடித்தது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடு களுக்கும், சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையம் வந்து செல் கின்றனர். இந்நிலையில், விமான போக்கு வரத்தை ஆய்வு செய்யும் வெளி நாட்டைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி சார்பில் சமீபத்தில் சர்வதேச அளவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட் டத்தில் நடந்த விமான போக்கு வரத்தை மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விமான நிலையங்களுக்கு விமானங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவது, புறப்பட்டுச் செல்வது, பயணிகள் சேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவு களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீ பத்தில் வெளியிடப்பட்டன. அதில், சர்வதேச அளவில் சரியான நேரத் துக்கு விமானங்களை இயக்கும் உலகின் முதன்மையான 20 விமான நிலையங்களுக்கான பட்டியலில், கோவை விமான நிலையம் 13 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் இந்த விமான நிலையம், 88.01 சதவிகித்துடன் 13ஆவது இடத் தைப் பிடித்துள்ளது. சேவை ரத்து 0.54 சதவிகிதம் மட்டுமே. இந்த பட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் 91.45 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது.