districts

img

ஏழாம் வகுப்பு மாணவியின் சிறுகதை நூல் வெளியீடு

திருப்பூர், ஜூன் 18 - தமிழ் முற்போக்கு படைப்பாளி களில்  தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருப்பவர் எழுத்தாளர் சம்சு தீன் ஹிரா. இவரது புதல்வி, ஏழாம்  வகுப்பு படிக்கும் மாணவி ஹினா  சுல்தானா, தனது  முதல் சிறுகதை  ஆங்கில நூலை திருப்பூரில் வெள் ளியன்று வெளியிட்டு இருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா திருப் பூர் சமரச சன்மார்க்க சங்க வளாகத் தில் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு ஆளுமைகளின் வாழ்த் துரைகளோடு துவங்கிய நிகழ்வில் நூல் குறித்து, ஆசிரியர் சம்பத் நுட் பமாக மதிப்புரை செய்திருக்கிறார். அவர் நூல் குறித்து கூறியிருப்ப தாவது: நல்ல திரைப்படங்களின் வழி கதையுலகில் நுழைந்து கொண்ட ஏழாம் வகுப்பு மாணவி யின் சிறுகதை முயற்சி இது. இவர் அரசுப்பள்ளி மாணவி என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஆங்கி லத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூ லின் வழி எனக்கு பல புதிய சொற் கள் அறிமுகமாகின.

சுவராசியங்க ளுக்கு குறைவில்லாத இந்நூல்,  இக்கால குழந்தைகளின் மன  நெருக்கடியை பிரதிபலிப்பதாக உணர முடிந்தது. யாருடனும் பகிர முடியாத அவ மானங்களை, வலிகளை தாங்க  இயலாத குழந்தைகளின் உணர்வு கள் அவர்களுக்குள்ளேயே அழுத்தி வைக்கப்படும்போது மேலும் விகா ரமான ஒரு உலகம் அவர்களுக்குள் ளேயே உருவாகி விடுகிறது. குழந் தைகளின் இந்த உளச்சிக்கல்களை ஹினாவின் கதை சமரசமில்லாது வெளிப்படுத்தி இருக்கிறது. ஏன் சமரசமில்லை என்பதை இந்நூலை  வாசிப்பதன் மூலம் அறிய முடி யும். சூனியக்காரியின் வசமாகும் சிறுவன் அலெக்ஸ், “நானும் உன் னைப் போலவே மாறிட விரும்புகி றேன்; இந்த வாழ்க்கையில் விருப்ப மில்லை” என்பதாகக் கூறுவதை சின்ன அதிர்வோடுதான் வாசிக்க முடிந்தது. 25 பக்கங்களுக்குள் முடிந்து விட்ட இக்கதை, இன்னும் சற்று சீர் படுத்தி இருந்தால் இன்னும் துலக்க மாக குழந்தைகளை குறித்து பேசி டும் நாவலாக மாறியிருக்கும். ஹினாவின் கதையுலகிற்கு யாஷி ராவின் ஓவியங்கள் பொருத்தமாக அமைந்திருக்கிறது. சரிதா ஜோ பேசிய பிறகுதான் கவனித்தேன், அவ்வோவியங்களில் சூனியக் காரியின் முகம் வெளிப்படாதிருக் கும் சூட்சுமம் அதன் பிறகே எனக் குப் புரிந்தது. தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், கவிநிலா பதிப்பகமும் இந்த நல்ல முயற்சியை முன்னெ டுத்துள்ளனர், என்றார்.