districts

img

விலைவாசி உயர்வுக்கு எதிராக பிரச்சாரம்

கோவை, நவ.12- விலைவாசி உயர்வு உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக் கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவையில் பிரச்சா ரத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலக் குழு  அறைகூவல்படி, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சிறு, குறு தொழில் பாதிப்பு, பெண்கள் குழந்தைக ளுக்கு மீதான பாலியல் வன்முறை, நுண் நிதி நிறு வனங்களின் அடாவடித்தனங்கள், ஒன்றிய அரசின் சேவைத் துறைகள் தனியார் மயமாக்கல் உள்ளிட்ட ஒன் றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப் படுத்தி  மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கங்கள் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட் டம், சிங்காநல்லூர் நகரக் குழு சார்பில் இஎஸ்ஐ மருத்து வமனை அருகே பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.தெய் வேந்திரன், வி.சுரேஷ், நகரக் குழு செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுதா, சி.ஜோதி மணி, நகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.