தருமபுரி, பிப்.10- பிப்.16 ஆம் தேதியன்று நடை பெற உள்ள வேலை நிறுத்தம் குறித்த கருத்தரங்கம் தருமபுரியில் நடை பெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில், பிப்.16 ஆம் தேதி நடைபெற உள்ள, அகில இந்திய வேலைநிறுத்த போராட்ட விளக்க கருத்தரங்கம், தரு மபுரியிலுள்ள சங்க அலுவலகத்தில், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட் டத் தலைவர் ஆர்.கோபாலன் தலை மையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.பாஸ்கரன் வரவேற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கிருஷ் ணன் துவக்க உரையாற்றினார். முன் னாள் மாநில துணைத்தலைவர் எம். நாராயணசாமி கருத்துரையாற்றி னார். இக்கூட்டத்தில், பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்த 4ஜி, 5ஜி சேவை வழங்க வேண்டும். பிஎஸ் என்எல் நிறுவனத்தில் பணியில் உள் ளவர்களுக்கு 3 ஆவது சம்பள மாற் றம், ஓய்வுபெற்றவர்களுக்கு பென் சன் மாற்றம் 2017 ஆம் ஆண்டு ஜன.1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் மற்றும் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து, பிப்.16 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை, தரும புரி மாவட்டத்தில் வெற்றியடைய செய்து என முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைத்தலை வர்கள் எம்.பாபு, எஸ்.ஹரிகரன், மக ளிர் துணைக்குழு அகில இந்திய நிர்வாகி ஜி.உமாராணி, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் பரிதிவேல், செய லாளர் ஆர்.பழனி, மாவட்ட நிர்வாகி கள் எம்.குப்புசாமி, ஜி.மணி, சி.முனி ராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.