districts

img

அண்ணனின் வாய்க்கொழுப்பு தம்பிகள் விரட்டப்படுகின்றனர்

ஈரோடு, பிப்.18- எலும்பில்லாத நாக்கு எப்படியும் பேசும் என்பதற்கு உதாரணமாய் திகழும் நாம் தமிழர் கட்சி சீமான், ஈரோடு கிழக்கில் வாய்க்கொழுப்பாக பேசியது வினை யாகி, தம்பிகளை வாக்காளர்கள் விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல்  வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாம்  தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுகிறார். இவருக்கு  ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள, நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில், ஈரோடு வந்தார்.  அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அருந்ததியர் மக்கள்  வந்தேறிகள் என பொருள்படும் வகையில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். ஆமைக்கறி இட்லி துவங்கி இவர்  அடுக்கடுக்காக பேசியதை தம்பிகள் சீரியசாக எடுத்துக் கொண்டாலும், தமிழ்நாட்டு மக்கள் வடிவேலுவின் மார்க் கெட்டை சீமான் கைப்பற்றி விட்டார் என்கிற நகையாட லுடனே நகர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அருந்ததிய மக்களின் வாக்குகளை கவர வேண்டும் என நினைத்து பேசியது, அவருக்கே வினையாகி வந்து முடிந்துள்ளது. சீமானின் இந்த பேச்சு முற்போக்கு அமைப்புகள் மற்றும் அருந்ததியர் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி ராஜாஜிநகர் அருந்ததி தெருவில், வாக்கு கேட்க சென்ற நாம் தமிழர்  கட்சியினரை, அப்பகுதி ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய தால் பரபரப்பு ஏற்பட்டது. உங்கள் கட்சியின் தலைவர் சீமான்  அருந்ததியர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுக் கூட்டம் மேடையில் பேசுகிறார்.  எங்களை வந்தேறிகள் என்று  தவறான தகவல்களையும் கூறுகிறார். எனவே, நீங்கள்  அருந்ததியர்களின் வாக்குகளை கேட்டு எங்கள் தெருவிற் குள் வரக்கூடாது. உங்கள் தலைவர் மன்னிப்பு கேட்க  வேண்டும். அப்போதுதான் உங்களை இந்த பகுதிக்குள் வருவதற்கு அனுமதி அளிப்போம். எனவே திரும்பிச் செல் லுங்கள் என தெரிவித்துள்ளனர். அண்ணணின் வாய்க் கொழுப்பு அன்புத்தம்பிகளை வாக்கு சேகரிக்க விடாமல் விரட்டியடிக்கிறது என கட்சியினர் புலம்புகின்றனர். இதே போன்றே ஈரோடு கிழக்கு தொகுதியின் பல்வேறு இடங் களிலும், இதே நிலை நீடிப்பதால் கணிசமான வாக்குகளை  பெறுவோம் என நினைத்திருந்த நாம் தமிழர் கட்சியினருக்கு  இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், மக்க ளை இன ரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் தேடும் சீமான்  போன்ற  நபர்கள் அரசியல் களத்தில் இருந்தே முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டியவர்கள். சீமானின் பேச்சுகள் நகைப்புக்குரியவை என மக்கள் கடந்து போவதுதான் ஆபத்தை ஏற்படுத்தும். அவ்வப்போது இதுபோன்ற எதிர்ப்பை வெளிப்படுத்தினால்தான் இதுபோன்ற அடை யாள அரசியலில் ஆதாயம் தேடுபவர்கள் ஒழிக்கப்படு வார்கள் என்றனர்.