districts

img

போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.26- அரசு பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் தொழிலாளர் களின் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியுவினர் பல் வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச ஊதியம் ரூ.21  ஆயிரம் கூட பெறாத டாஸ்மாக் கடை  ஊழியர்களுக்கு 40 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என  வலியுறுத்தி கோவையில் சிஐடியு  டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். கோரிக்கைகள் குறித்து, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ. ஜான் அந்தோணிராஜ், பொருளா ளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகி யோர் உரையாற்றினர்.  முன்னதாக, தமிழக அரசுக்கு  வருவாயை ஈட்டி தரும் துறையான  டாஸ்மார்க் ஊழியர்களுக்கு 20 சத விகித போனஸ், 20 சதவிகித கரு ணைத்தொகை, முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், போக்குவரத்து, மின்வாரிய ஊழி யர்களுக்கு வழங்கப்படுவது போல இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முழக்கங்களாக எழுப்பி னர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்ற னர். முடிவில், சரவணன் நன்றி கூறி னர். இதேபோன்று, கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு சிஐடியு  டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐ டியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி, சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்பிரபு உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில் திர ளானோர் பங்கேற்றனர். சேலம் இதேபோன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள  போக்குவரத்து பணிமனை முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு அரசு துறையின் கீழ் செயல் படும் போக்குவரத்து கழகம், கூட்டு றவுத்துறை, ஆவின், மின்வாரியம், டாஸ்மாக் போன்றவற்றில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பள சட்டத்தின் படி போனஸ் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தி முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல தலைவர் கே.செம் பான் தலைமை வகித்தார். இதில் சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.வெங்கடபதி, அரசு போக் குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளர் சேகர், விரைவு போக்குவ ரத்து சங்க மாநில துணைப்பொதுச் செயலாளர் முருகேசன், டாஸ்மாக் பணியாளர் சங்க செயலாளர் விஜ யகுமார், கூட்டுறவு சங்க நிர்வாகி சந்தானம், சுமைப்பணி தொழிலா ளர் சங்க நிர்வாகி ஆறுமுகம் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.