districts

img

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்திடுக அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்

கோவை, செப்.14- கோவை மாநகராட்சி டெண்டர்களில் ஊழ லில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங் களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள் ளது.

இதுகுறித்து கோவையில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங் கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டு களாக நடந்து வந்த ஊழல்களை அறப்போர் இயக்கம் தொடர்ந்து வெளிக்கொண்டு வந் துள்ளது. அதன் மீது தற்பொழுது லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, அவரது நெருங்கிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் வீடுகளிலும் சோதனை செய்தது.

தற் பொழுது கோவை மாநகராட்சியை நேர்மை யான மாநகராட்சியாக மாற்ற எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநக ராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கராவி டம்  கோரிக்கைகளை வைத்துள்ளோம்.  இதில் கூறியிருப்பதாவது, கோவை மாந கராட்சியில் கடந்த சில வருடங்களாக மோசடி மற்றும் ஊழல் டெண்டர்களில் ஈடுபட்ட முன் னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான செந்தில் அண்டு கோ, கே.சி.பி  இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், வரதன் இன்ப்ரா, கான்ஸ்டிரானிக்ஸ் இந்தியா, ராஜன் ரத்தினசாமி, ராபர்ட் ராஜா போன்ற நிறுவ னங்களை உடனடியாக கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும், இந்த ஊழல் டெண்டர்களுக்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உடனடியாக பணி யிடை நீக்கம் செய்ய வேண்டும்.

ஒரே டெண் டரில் போட்டிபோடும் இருவர் நிறுவனத்தின் இயக்குனர் ஒரே நபராக இருந்தாலோ, அல் லது நேரடி சொந்தக்காரர்களாக இருந்தாலோ அவர்கள் டெண்டரில் போட்டி போட தடை விதிக்க வேண்டும். கோவை மாநகராட்சி டெண்டர்களை முழுக்க முழுக்க இ-டெண்டர் களாக மாற்ற வேண்டும். டெண்டர்களில் வெளிப்படை தன்மை வேண்டும். டெண்ட ரில் போட்டி போட்டவர்கள் யார், எவ்வளவு விலைக்கு எந்த டெண்டரை எடுத்துள்ளார் கள், டெண்டர்களில் செய்ய வேண்டிய வேலைகள் எவை போன்ற விவரங்கள் www. tntenders.gov.in இணையதளத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோவை மாநகராட்சி அதி காரிகளால் மறைக்கப்பட்டு வருகிறது. அதை உடனே சரி செய்ய வேண்டும்.  அதேபோல், அரசாங்க அனுமதி பெறா மல் டெண்டர்களை பிரித்து விடப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.  சாலை போடும் பொழுது சாலை உயராமல் அதற்கேற்ப சாலையை தோண்டி எடுத்து அதே உயர திற்கு சாலை போடும் முறையை கையாள வேண் டும். டெண்டர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் விலை, சந்தை மதிப்பு போன்றவை சரி பார்த்து உண்மையான சந்தை மதிப்பிற்கு சரி செய்யப்பட வேண்டும். கடந்த சில ஆண்டு களாய் இணையத்தில் ஏற்றாத மன்ற தீர்மா னங்கள் தற்பொழுது ஏற்றப்பட்டது வரவேற் கத்தக்கது.

எந்த தாமதமும் இல்லாமல் அவை மாதா மாதம் பதிவேற்றம் செய்யப்பட வேண் டும். சந்தை மதிப்பு மாதத்திற்கு சதுரடிக்கு ரூ.105 உள்ள ஆர்.எஸ்.புரத்தில் வெறும் ரூ.5க்கு ஆலயம் டிரஸ்ட் மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நல்லறம் டிரஸ் டுக்கு அம்மா ஐஏஎஸ் அகாடமி நடத்த கொடுக் கப்பட்ட கோவை மாநகராட்சிக்கு சொந்த மான 5 ஆயிரத்து 400 சதுரஅடி நிலம் மற்றும் கட்டிடத்தை திரும்பப் பெற வேண்டும். கோவை மாநகராட்சி இணையதள புகார்  வழிமுறையை, நம்ம சென்னை புகார் வழி முறை போல மேம்படுத்தப்பட வேண்டும்.

 புகார் பிரச்சனை தீர்க்காமல் மூடப்பட்டால், மக் கள் புகாரை மீண்டும் திறந்து அதை மேலதி காரிக்கு தெரிவிக்கும் வழிமுறையை உரு வாக்க வேண்டும். லஞ்ச ஒழிப்பு துறையின ரால் சோதனை செய்யப்பட்ட மாநகராட்சி அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

;