districts

பெட்மைன், போதை மாத்திரைகள் கடத்தல் - 5 பேர் கைது

கோவை, மார்ச் 31- கோவை புறநகரில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அன் னூர் அருகே பெட்டமைன் எனும் போதை பொருளை கடத்தி வந்த 2 கேரள வாலிபர்கள்  கைது செய்யப்பட்டனர். இதேபோன்று, போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை  செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட னர். கோவை மாவட்டம், அன்னூர் புறநகர  பகுதியாக இருந்தாலும் வணிகரீதியில் நூற் பாலைகள், ஜின்னிங் தொழிற்சாலைகள் ஏரா ளம் உள்ளது. இதன் காரணமாக ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் இந்த பகுதி யில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்நி லையில், இங்குள்ள வட மாநிலத் தொழிலா ளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி  வைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட் களை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில், அன்னூர் அருகே உள்ள பசூர் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந் தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாக னத்தில் வந்த இருவரை பிடித்து சோதனை யிட்டனர். அவர்களிடத்தில், உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான மெத்தபெட்டமைன் பொட்டலங்கள் இருந் தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார், தீவிர விசாரணை மேற் கொண்டனர், அதில், இவர்கள் கேரளாவைச் சேர்ந்த ஜின்ஷன் மற்றும் குரியோஸ் என்ப தும், அன்னூரில் மெத்தபெட்டமைன் என்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற் பனைக்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சுமார் 8 கிராம் எடை கொண்ட மெத்தபெட்டமைனை போலீசார் பறிமுதல் செய்தனர். எட்டு கிராம் எடை கொண்ட மெத்த பெட்டமைன் பொட்டலத்தின் மதிப்பு சுமார் 24 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. கேரள வாலிபர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். அண்மைக்காலமாக கோவை மாவட்டத் தின் ஊரகப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற் பனை செய்பவர்கள் போலீசில் சிக்கி வந்த நிலையில், தற்போது உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் புழக்கம் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாந கர பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு, மக் கள் அடர்த்தி உள்ளிட்ட பிரச்சனைகளால் அன்னூர் உள்ளிட்ட கோவையின் புறநகர பகுதிகளில் போதைப்பொருட்கள் பரிமாற்றம் அதிக அளவில் நடைபெறுவதாக சொல்லப் படுகிறது. போதைப் பொருட்கள் புழக்கம் கார ணமாக அண்மைக்காலமாக புறநகர பகுதி களில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங் கள் நாள்தோறும் அரங்கேறி வருவதாக குற் றம் சாட்டும் பொதுமக்கள், போதைப்பொருட் கள் புழக்கத்தை தடுக்க கோவை மாவட்ட  போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

358 போதை மாத்திரைகள் பறிமுதல்

கோவை, மசக்காளிபாளையம் மாநக ராட்சி பள்ளி அருகே சிலர் போதை மாத்திரை களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசா ரித்து, சோதனை மேற்கொண்டு விசாரிக்கை யில், அவர்களிடம் வலி நிவாரணி மாத்திரை களை வாங்கி போதைக்காக விற்பனை செய் ததும், அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தில் போதைக்காக பயன் படுத்தியதும் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை யில் ஈடுபட்ட ரத்தினபுரி சிஎம் பழனி தெருவை சேர்ந்த ஷ்யாம்(28), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த அன்வர் சாதிக்(28), மற்றும் கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த சுல்தான் பாஷா (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 358 போதை மாத்திரை கள், பயன்படுத்தப்பட்ட 10 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரும் கைது  செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

;