districts

img

ஹைட்ரோ கார்பன் திட்ட பேரழிவு டெல்டா மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம்

நாகப்பட்டினம், மே 7-ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பேரழிவு பற்றி மக்களிடையே விளக்கும் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை டெல்டா மாவட்டங்களில் ஜுன் 5 முதல் 10 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருக் கிறது.காவிரி வளநாடாகிய டெல்டா மாவட்டங்களைப் பாலைவன மாக்கும் கொடிய திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் செயற்பாட்டைத் தடுத்து, விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் நிலத்தடி நீர் வளத்தையும் பாதுகாத்திட, டெல்டா மாவட்டங் களின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினம் வி.பி.என். கூட்டரங்கில் செவ் வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக் கோட்டை, காரைக்கால், கடலூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காவிரி டெல்டா பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டத்திற்கு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான வி.மாரிமுத்து தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி வரவேற்புரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் திட்டச் செயற்பாடுகளின் அழிவிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது? சி.பி.எம். சார்பில் வலிமை யான தொடர் போராட்டங்களை எவ்விதம் நடத்துவது? என்பது குறித்துச் சிறப்புரையாற்றினார்.புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், ஏ.வி.முருகையன், மூசா, எஸ்.மாதவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், காரைக்கால் மாவட்டம் சார்பில் வெ.நிலவழகன் கருத்துரையாற்றினர்.

தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், நாகை மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ், கடலூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பிரபு இரணியன், ஜெயராமன் உள்ளிட் டோர் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மாலதி மனோகரன், திருவாரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் நா.பாலசுப்பிரமணியன், நாகைமாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் ஆர்.முத்துப்பெருமாள், ஜி.ஜெயராமன், பி.சீனிவாசன், சி.வி.ஆர்.ஜீவானந்தம், ஏ.வி.சிங்காரவேலன், த.லதா, நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு, நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முதற்கட்டமாக வரும் ஜூன் 5 முதல் 10-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் ஆகிய மாவட்டங் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பேரழிவைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், இருசக்கர வாகனங்களின் பேரணியாய், அனைத்து கிராமங்கள், வீதிகள் தோறும் பிரச்சாரப் பயணம் செய்வது. அதன்பின் அடுத்தக் கட்டப் போராட்டம் பற்றி முடி வெடுப்பது எனக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. 

;