districts

img

பேருந்தை சிறைப்பிடிக்க முயற்சி: அதிகாரிகள் உறுதியளிப்பு

திருப்பூர், செப். 28 - பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏதுவாக அரசு பேருந்துகளை இயக்க கோரி பல முறை மனு அளித் தும் நடவடிக்கை எடுக்காததால், வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வாவிபாளையத் தில் பேருந்தை சிறைப் பிடிக்க முற்பட் டனர்.  திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே வாவிபாளையத்தில் 1000க் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின்றன. இப்பகுதியில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கணக்கம்பாளையம், பூலுவபட்டி, பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்குச் செல் கின்றனர். காலை நேரங்களில் பள் ளிக்கு செல்ல பேருந்து இல்லாத தால் வழியில் வரும் வாகனங்களில் லிப்ட் கேட்டு சென்று வருகின்றனர். மேலும் திருப்பூரில் உள்ள பல் வேறு பகுதிகளுக்கு பணிக்கு செல் லும் தொழிலாளர்களும் போதிய பேருந்து வசதி இல்லாமல் சிரமத் திற்கு உள்ளாகி வந்தனர். இதைத் தொடர்ந்து போதிய பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் ஆகஸ்ட் 22ஆம்  தேதி பேருந்து சிறைபிடிப்பு போராட் டம் அறிவித்தனர். இதையடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி திருப்பூர்  வடக்கு வட்டாட்சியர் தலைமையில், போக்குவரத்துக் கழக அதிகாரிகளு டன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.   ஒரு மாதத்திற்குள் கோரிக்கை கள் நிறைவேற்றப்படும் என்று அதி காரிகள் உறுதியளித்தனர்.  எனினும் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காததால், வியாழனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி தலைமையில் வாவிபாளையத்தில் அரசு பேருந்தை சிறைப்பிடிக்க முற் பட்டனர். இதையறிந்த திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் மகேஸ்வரன், போக்கு வரத்து கிளை மேலாளர் ராமநாதன்,  உதவி மேலாளர் ராஜேந்திரன், கிராம  நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் உட்பட காவல் துறையினர் பலர் சம் பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதில் திங்கட்கிழமை முதல் பள்ளி மாணவ, மாணவியர்க்கு ஏது வாக காலை 8.15 மணிக்கு அரசு  பேருந்து இயக்கப்படும். சமத்துவ புரம், அடுக்குமாடி குடியிருப்பு பகு திகள் வரை வந்த பேருந்து இனி  வாவிபாளையம் வரை வரும். இரண்டு வாரத்திற்குள் கூலிப்பா ளையம் நால்ரோடு - நல்லூர் வழி யாக பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் சுற்றுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.காளியப்பன், வடக்கு ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் மகாலிங் கம், சி.பானுமதி, கிளைச் செயலாளர் கள் மங்கலட்சுமி, பாலசுப்பிரமணி யம் உட்பட பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.