கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி உதயம் திராவிட மகளிர் சங்கம் சார்பில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு துணிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மகளிர் அமைப்பின் தலைவர் பிரபாலினி, துணைத்தலைவர் உஷா, துணைச்செயலாளர் சரளகுமாரி மற்றும் நிர்வாகிகள் தபிதா, கோகிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.