கோவை, ஆக.24- சாலையோரம் தள்ளுவண்டி கடை வைத்து வாழ்க்கை நடத்தி வரும் வியாபாரிகள் மீது கெடுபிடி களை விதிப்பதை போலீசார் உட் பட அரசு அதிகாரிகள் கைவிட வேண் டும் என வலியுறுத்தி சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலையோர வியாபாரிக ளுக்கு வெண்டிங் கமிட்டி அமைக்க வேண்டும். சாலையோர வியாபாரி கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். கூட்டு றவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். வஉசி பூங்கா கடைகள் வைக்க, விடுபட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கால தாமதம் இல்லாமல் உரிமம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் செயலாளர் பி.ராமு தலைமை வகித்தார். இப்போராட்டத்தில், சந்திர யான் 3 செயற்கைக்கோள் வெற்றி அடைந்ததை கொண்டாடுகிற வேலையில், சாலையோர வியா பாரிகள் தங்களுடைய கோரிக்கை களுக்காக தெருவில் நிற்பதையும் அரசு கவனிக்க வேண்டும். அனு தினமும் உழைத்துப் பிழைப்பவர் கள் கோரிக்கைகளை அரசு உடன டியாக கவனம் செலுத்தி நிறை வேற்ற வேண்டும். அதேபோல போலீசார் சாலையோர வியாபாரி களுக்கு கெடுபிடிகள் விதிப்பதை கைவிட வேண்டும். பிழைப்பிற்கு உழைப்பவர்கள் சமூக விரோதிகள் இல்லை. எனவே, அரசு நிகழ்ச்சி கள், பொது நிகழ்ச்சிகளுக்கு வியா பாரிகளை கடை போடக்கூடாது என மிரட்டும் போக்கினை கைவிட வேண் டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலு சாமி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரத் தினகுமார், தலைவர் ராஜாகனி உட் பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், சங்கத்தின் முன்னாள் தலை வர் கருப்பையா நன்றி கூறினார்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சாலையோர வியா பாரிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.விஜயலட்சுமி தலைமை வகித் தார். இதில், சிஐடியு மாவட்டச் செய லாளர் ஏ.கோவிந்தன், மாவட்ட உத வித்தலைவர்கள் ஆர்.வெங்கடா பதி, எஸ்.கே.தியாகராஜன், சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட் டச் செயலாளர் பி.தனசேகரன், பொருளாளர் எஸ்.கார்த்தி உட்பட திரளான சாலையோர வியாபாரி கள் கலந்து கொண்டனர்.
உதகை
உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சாலையோர வியா பாரிகள் சங்க மாவட்டத் தலைவர் ரவிக்குமார் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐ டியு மாவட்டச் செயலாளர் வினோத், மாவட்டத் தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் நவீன்சந்தி ரன், தமிழ்நாடு சாலையோர வியா பாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கி ணைப்புக்குழு உறுப்பினர் சந்தி யாகு, ரபீக், கோகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.