districts

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்

தருமபுரி, மே 23- அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன் பழகன் மீது ஊழல் தடுப்பு காவல் துறையினர்  குற்ற பத்திரிகை தாக்கல்‌ செய்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக  கே.பி.அன்பழகன் இருந்தார். தற்போது இவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  கடந்த 2022 ஆம் ஆண்டில், அவருக்கு சொந்த மான தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளிலும், அதேபோல் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 58 இடங்களில் ஊழல்  தடுப்பு போலீசார் சோதனை மேற் கொண்டனர். இச்சோதனையின் மூலம் பல கோடி ரூபாய்,  அமைச்சராக இருந்த காலத்தில் சொத்து  சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த  வழக்கில் கே.பி.அன்பழகன், அவரது  மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்பு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதற்குண்டான ஆவணங்களை ஊழல்  தடுப்பு போலீசார் சேகரித்து வந்தனர்.  இந்நிலையில், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள் ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து, திங்க ளன்று புலன் விசாரணை அதிகாரி பழனிச் சாமி, தருமபுரி சிறப்பு நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சுமார் 10 ஆயிரம் பக்கத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தார்.