கோவை, மார்ச் 29- தமிழ்நாடு 39, புதுச்சேரி 1 என மொத்தம் 40 இ டங்களிலும், இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என திமுக துணைப் பொதுச்செயாலாளர் கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவையில், திமுக துணைப் பொதுச் செயலா ளர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் கணபதி ராஜ்குமார் பெரும் வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கோவை யில் அதிமுக, அண்ணாமலை ஆகியோர் இரண்டா வது இடத்திற்கு போட்டி போடுகின்றனர். திமுக அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை தமிழகத்தில் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் உரிமைதொகை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். பாஜக ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை போல் ஒரே பயனாளிக்கு பல எண்கள் கொடுத்து ஊழல் செய்த திட்டம் போல திமுக திட்டங்கள் கிடை யாது. திமுக ஆட்சியின் திட்டங்கள் மக்கள் நேரிடை யாக பயனடைகின்றனர். எனவே, மக்கள் தெளி வாக திமுக கூட்டணி இருக்கும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். மேலும், பாஜக எந்த பொறுப் பிற்கும் வந்து விடக்கூடாது என்பதில் மக்கள் தெளி வாக இருக்கின்றனர். தமிழகம், புதுச்சேரி என 40 இடங்களிலும் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும். போதைப்பொருள் விவகாரத்தை பொறுத்த வரை, அந்த துறையே ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது. போதைப்பொருட்களை கட்டுப்ப டுத்த, தடுக்க ஒன்றிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். போதை பொருள் விவகாரத்தில் இதனை தடுக்க, ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு உதவ தயாராக உள்ளோம். அதேநேரத்தில், பாஜக ஆட்சி செய்யும் குஜராத்தில்தான் பல லட் சம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த துறைமுகம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும். (மோடியின் நண்பர் அதானியின் துறைமுகம்) அதன் பின்னர் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்த விசாரணையையே மூடி விட்டார்களா? என்பதும் தெரியவில்லை. அண்ணா மலை கனவு காண்பது அவரது உரிமை, ஆனால் வெற்றி திமுகவுக்குத்தான். பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் இன்று உலகம் முழுவதும் பேசப் படுகிறது. நாங்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்களை நம்பித்தான் வேட்பாளர்களை நிறுத் தியுள்ளோம். இந்தியா கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள், என் றார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கோவை மாநகர் மாவட்டச் செய லாளர் நா.கார்த்திக், திமுக நிர்வாகி மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.