districts

img

மரவள்ளி டன்னுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கிடுக

சேலம், ஜன.30- மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதை வலியு றுத்தி சேலம், ஆத்தூரில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் ஆர்ப் பாட்டம் திங்களன்று நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆத்தூர் வட்டக்குழு சார்பில் ஆத்தூர் மணிக்கூண்டு அருகில் வட்ட கிளை தலைவர் இல.கலை மணி  தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், ஆத்தூர், கொத் தாம்பாடி, பைத்தூர் புதூர், புதுஉடையம் பட்டி, நரசிங்கபுரம் தாண்டவராயபுரம் உள் ளிட்ட விண்ணப்பித்தவர்களுக்கு வீட்டு மனையும், மனைப்பட்டா வழங்க வேண்டும். மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ3,500ம், மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு  ரூ.15,000 வழங்க வேண்டும். மஞ்சள் குவிண் டாலுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். கிராமப்புற வேலை திட்டத்தில் 200 நாள் வேலையும், ரூ600 ஊதியமும் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  முன்னதாக ஆர்ப்பாட்டத்தையடுத்து, ஆத்தூர் வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், விண்ணப்பித்த மற்றவர்களுக்கும் ஆய்வு செய்து விரைவில் வீட்டுமனை பட்டா தருவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும், இதர கோரிக்கைகளை மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலா ளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா மற்றும் ஆர்.வெங் கடாஜலம், பி.தங்கவேலு, ஏ.பொன்னுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், 300க்கும் மேற்பட்டோர் திரண்டு கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப் பினர்.

;