சேலம், ஏப்.6- சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். மக்களவை பொதுத்தேர்தலையொட்டி, வரும் ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள 3,260 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், சேலம் மக்களவைத் தொகு திக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 1,766 வாக்குச் சாவடிகளும் அடங்கும். சேலம் மக்களவைத் தொகுதிக்குட் பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் 82 பதற் றமான வாக்குச்சாவடிகளும், மாவட்ட காவல் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் 48 பதற்றமான வாக்குச்சாவடிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவ தும் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் 235 வாக்குச்சாவ டிகள் பதற்றமானவை என்றும், 15 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் 89 பதற்றமான வாக்குச்சாவடிகளும், மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 146 பதற்றமான வாக்குச்சாவ டிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மக்களவை தொகுதிக்குட்பட்ட சங்கர் நகர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நி லைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 173 மையத்தினையும், செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட் டுள்ள வாக்குச்சாவடி எண் 150 மையத்தினையும், ஜெயரா கிணி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி எண் 142, 143 மையங்கள் உள்ளிட்ட பதற்றமான வாக் குச்சாவடிகள் அனைத்தையும் மாவட்ட தேர்தல் அலுவலர் ரா.பிருந்தாதேவி வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அம்பாயிரநாதன், வருவாய் வட்டாட்சியர் தாமோதரன் உள் ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.