districts

img

ஈஷா யோகா மையத்தின் பள்ளியில் படிக்கும் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஈஷா யோகா மையத்தின்  பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மோச்சனா என்ற மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  ஈஷா பள்ளி மாணவர்கள் சிலர் பீளமேடு அருகே  உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு யோகா செய்ய வந்திருந்தனர்

யோகா நிகழ்ச்சி முடிந்த பிறகு சவுரிபாளையம் ஜி.வி ரெசிடென்சி பகுதியில் ஈஷா மையம் வாடகைக்கு எடுத்துள்ள மையத்திற்கு ஓய்விற்காக சென்றனர்

அங்கு எதிர்பாராத விதமாக தண்ணீர் பைப்பில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் மோச்சனா உயிரிழப்பு

அவரது உடல் இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

;