districts

img

தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற பேராவூரணி மாணவி

தஞ்சாவூர், ஏப்.25- மின்சாரமே இல்லாமல், தெரு விளக்கின் வெளிச்சத்தில் படித்து பிளஸ் 2-வில்524 மதிப்பெண் எடுத்த நிலையில், நீட்தேர்வுக்கு விண்ணப்பத்துள்ள மாணவி நிதியுதவி இல்லாமல் தவித்து வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் டெய்லர்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். மனைவி சித்ரா இவரும் கூலித் தொழிலாளி. இவரது மகள் சஹானா(17), பேராவூரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயிரி கணிதவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600-க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார். தென்னந்தோப்பில் குருவிக்கூடு போன்ற சிறிய குடிசை வீட்டில் வசிக்கும் இவர்கள் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் மருத்துவராக வேண்டும் என்ற கனவில், நீட் தேர்விற்கு தயாராகி வருகிறார்மாணவி சஹானா.இதுகுறித்து சஹானா கூறுகையில், ‘நாங்க தென்னந்தோப்பில் குடிசை வீட்டில் குடியிருக்கோம். தோப்பையும் சேர்த்து கவனிச்சுகிடுறது எங்க வேலை.அப்பாவுக்கு போதுமான வருமானம் இல்லை. இன்னும் எங்க வீடு மின்சாரத்தைப் பார்த்ததேயில்லை. இதுவே எங்க வறுமைக்கு ஒரு சாட்சி. நான் படிக்கிற படிப்புதான் எங்க வீட்டின் தலையெழுத்தை மாற்றும். காலையில் சூரிய வெயிலிலும், பள்ளி அருகே இரவில் தெருவிளக்கிலும் உட்கார்ந்து படிப்பேன். வீட்டுக்கு வந்துவிட்டால் மின்சாரம் இல்லாமல் படிக்க முடியாது. அப்படியிருந்தும் பத்தாம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்றேன். 


இப்போது கஜா புயலால் எங்கள் வீடு காணாமல் போனது. சிலரின் உதவியுடன் வீட்டைச் சீரமைத்தோம். எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் கஜானாதேவி நிவாரணத்துக்கு வந்த பொருள்களை எனக்குக் கொடுத்தார். அதில் சோலார் விளக்கு இருப்பதை பார்த்து அதை கேட்டேன். அப்போதுதான் என் ஆசிரியருக்கு எங்கள் வீட்டில் மின்சாரமே கிடையாது என்பதை தெரியும். கரன்ட்டே இல்லாமல் படிச்சு நல்லமார்க் எடுத்திருப்பதை அறிந்து அசந்து போய் கேட்டார். தொடர்ந்து படிப்பிற்கு உதவினார். பல கஷ்டத்திற்கு இடையிலும் என்னை விடாமல் படிக்க வைத்தார் என்அப்பா. இப்போது 600-க்கு 524 மார்க்குஎடுத்துள்ளேன். டாக்டராக வேண்டும்என்பது ஆசை. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளேன். இதற்காக தயாராகி வருகிறேன். ஆனால் போதுமான வசதி இல்லை. மேற்படிப்பை எப்படிதொடர்வது என தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் " என கண்ணீர் மல்க தெரிவித்தார்.உதவ முடிந்தவர்கள் உதவலாமே... - தொடர்புக்கு 82702 23022.(ந.நி.)

;