தாராபுரம், ஜன.17- தாராபுரம் அமராவதி ஆற்றில் முழ்கி 6 இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், இடுவாய் அண்ணா மலை கார்டன் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் 3 வேன்களில் திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் அருகே உள்ள மாம்பாறை முனியப்பன் கோவிலுக்கு கிடாவெட்டி சாமி கும்பிட சென்றுள்ளனர். அங்கு வழிபாடு முடித்துவிட்டு மதியம் 3 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்த னர். அப்போது, தாராபுரம் அமராவதி ஆற் றுப்பாலம் அருகே வந்தபோது ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்ததும் குளிக்க ஆசைப்பட்டு அனைவரும் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 10 இளைஞர்கள் அங்குள்ள ஆழமான பகு திக்கு சென்றதால் நீரில் மூழ்கி தத்தளித்த னர். இதை பார்த்த உடன் வந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்து 4 பேரை பத்திரமாக மீட்டனர்.
ஆனால், மற்ற 6 பேரை காப்பாற்ற முடியலவில்லை. இதை யடுத்து தாராபுரம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறை யினரும் இணைந்து நீரில் முழ்கிய 6 பேரின் உடல்களை மீட்டனர். இதன்பின் உடல் களை பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இந்த விபத்தில் ஸ்ரீதர் (19), ரஞ்சித் (19), யுவன் (19), மோகன் (19), சக்கரவர்மன் (17), அமிர்தகிருஷ்ணன் (19) ஆகியோர் உயிரி ழந்தனர். இதில் ஸ்ரீதர், ரஞ்சித் ஆகியோரும், யுவன், மோகன் ஆகியோரும் சகோதரர்கள் ஆவார்கள். மேலும், இவர்களை காப்பாற்ற முயன்ற சுரேஷ் (30) என்பவர் பாறையில் வழுக்கி விழுந்ததால் அவரது கை எலும்பு முறிந்தது. இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கிசிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவ லறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச் சர் என்.கயல்விழி செல்வராஜ் மருத்துவம னைக்கு சென்று உயிரிழந்தவர்களின் பெற் றோர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், இடுவாய் ஊராட்சிமன்ற தலைவர் கணேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செய லாளர் என்.கனகராஜ் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று உறவி னர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தொடரும் உயிர்பலி
தாராபுரம் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப் பட்டுள்ள அமராவதி பாலத்தின் கீழ் சுமார் 20 அடி ஆழம் வரை மணல் எடுக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் ஆழம் அதிகமாகவும், கீழே மணல் இல்லாமல் சேறும், சகதியுடன் புதைகுழி காணப்படுகிறது. இதுகுறித்து அறியாத வெளியூர் நபர்கள் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் முழ்கி பலியாவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த பகுதியில் மட்டும் இது வரை சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட பழனி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற வாலிபர் ஒருவர் இதே பகுதியில் நீரில் முழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே, இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைப்பதோடு, அதை மீறி யாரும் உள்ளே சென்று விடாதவாறு தடையை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.