districts

img

41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்

41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம், ரெட்டிபட்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில நிர்வாகி சிங்கராயன், மாவட்டச் செயலாளர் கலைவாணன், அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.