பள்ளிபாளையம், பிப்.5- குமாரபாளையத்தில் 3 வயதிலிருந்து 30 வயது வரை உள்ள சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வட்டையாசனம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி ஞாயிறன்று நடை பெற்றது. நாமக்கல், குமாரபாளை யம் தேசிய நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில், தமிழ்நாடு யோகா பெடரேசன் அமைப் பின் சார்பில், உலக சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் நாமக்கல், ஈரோடு, கோவை, திரு நெல்வேலி, கடலூர், நாகப்பட்டினம், உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராள மானோர் கலந்து கொண்டனர். இதில், ஒரே இடத்தில் வட்டையாசனம் எனப்படும் யோகா சனம், தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் செய் யும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுமார் மூன்று வயதிலிருந்து 30 வயது வரை உள்ள 300 பேர் கலந்து கொண்டு தொடர்ந்து ஐந்து நிமிடம் வரை யோகாசனம் செய்து அசத்தினர். இந்த நிகழ் வினை சாதனை நிகழ்ச்சியாக, நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்து, கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை நோபல் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்பினர் வழங்கினர். இந்நிகழ்ச்சியினை யோகாவில் தங்கப்பதக்கம் வென்ற, மது மிதா என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். அவ ருக்கும் விருது வழங்கப்பட்டது.