districts

ஒரே நாளில் 1 லட்சம் கொரோனா மாதிரி சோதனை: ஐ.சி.எம்.ஆர்

புதுதில்லி, மே 21- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து மூன்றாயி ரத்து 532 பேருக்கு மேற்பட்ட கொரோனா மாதிரிகள் பரி சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரி வித்துள்ளது. ஐ.சி.எம்.ஆர் வெளியிட் டுள்ள அறிக்கை:  மே 21-ஆம் தேதி வரை மொத் தம் 26 லட்சத்து 15 ஆயிரத்து 920 கொரோனா மாதிரிகள் பரிசோத னைகள் நடத்தப்பட்டுள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றால் 5,609 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் கொரோ னாவால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 1,12, 359 ஆக அதிகரித் துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு 63,624 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45,300 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,435 பேர் உயி ரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் மிக வும் மோசமாக பாதிக்கப்பட டுள்ள மஹாராஷ்டிரா (39,297) தொடர்ந்து முதலிடத்தில் உள் ளது. தமிழகம் (13,191) இரண்டா வது இடத்திலும், குஜராத் (12,537) மூன்றாவது இடத்திலும் , தில்லி (11,088) நான்காவது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் உள்ள பத்து முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 சதவீதம் நோயாளிகள் உள்ள னர். இதில் மஹாராஷ்டிராவில் உள்ள மூன்று நகரங்கள், குஜ ராத்தில் உள்ள இரண்டு நக ரங்கள், இராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்தியபிரதேசம், தமிழ் நாடு, புதுதில்லியில் தலா ஒரு நக ரங்கள் அடங்கும்.

;