districts

img

கண்ணாடி மாளிகையில் ‘பீஸ் லில்லி’

உதகை, ஜூன் 22- கண்ணாடி மாளிகையில்  காட்சிப்ப டுத்தப்பட்ட  ‘பீஸ் லில்லி’ மலர் சுற்று லாப் பயணிகளை வெகுவாக கவர்ந் துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு  தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு மலர் கண்காட்சியை ஒட்டி பூங்காவில்,  டேலியா, பேன்சி, இன்கா மேரிகோல்டு,  சால்வியா, டெல்பினியம் உள்ளிட்ட  பல லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப் பட்டது. இதனைத் தவிர, ஓரியண்டல்  லில்லி, ஆசியாடிக் லில்லி. கெல்லா  லில்லி உள்ளிட்ட பல ரகங்களில் லில்லி மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சீசன் முடிந்த நிலை யில், வார நாட்களில் சுற்றுலாப் பயணி கள் கணிசமாக வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் ரசிக்க கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன் மற் றும் பாத்திகளில் மலர்களை தயார்ப டுத்தி இங்கு வரும் சுற்றுலாப் பயணி களை மகிழ்விக்கின்றனர். தற்போது,  கண்ணாடி மாளிகையில்  காட்சிப்படுத் தப்பட்ட ‘பீஸ் லில்லி’ மலர்கள் சுற்று லாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தி ருப்பதால் அதன் அருகே நின்று புகைப் படம் எடுத்து செல்கின்றனர்.