districts

img

சிறந்த மருத்துவர் விருது பெற்ற மருத்துவருக்கு சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து

கும்பகோணம்,ஜூலை 4 தமிழக அரசு சார்பில் அண்மையில் மருத்துவ தினத்தன்று சிறந்த மருத்து வர் களுக்கான விருது வழங்கப்பட்டது அதில் கும்ப கோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிலைய தலைமை மருத்துவ அலுவலர் (R.M.O ) டாக்டர். பிரபாகரன் தமிழக அரசு சார்பில் சிறந்த மருத்துவருக்கான விருதை சுகாதாரத்துறை அமைச்சர்  சுப்பிரமணியனிடம் பெற் றார். மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின்  சார்பாக தலை மை மருத்துவர் பிரபாக ரனை நேரில் சந்தித்து  வாழ்த்து தெரிவிக்கப் பட்டது.. கட்சியின் தஞ்சை மாவ ட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாநகர செய லாளர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் ஏ. செல்வம், சிஐடியு மாவட்டத் தலைவர் மா. கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.