districts

img

போக்குவரத்திற்கு பயன்படாத சித்தாந்தபுரம் சாலை

கிருஷ்ணகிரி, செப். 17- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகில் ஒகேனக்கல் பிரதான சாலையிலிருந்து 3 கிலோ மீட்டர்.தூரத்தில் உள்ளது சித்தாண்டபுரம். இங்கு 180 குடும்பங்கள் வசிக்கின்றன. அஞ்செட்டியிலிருந்து இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறிவிட்டன. மேலும், சிறு மழை பெய்தால் கூட அந்த சாலை சேறும் சகதியுமாக மாறி நடக்கக் கூடிய முடியாத நிலை உள்ளது. இங்குள்ள மாணவர்கள் அஞ்செட்டியில் உள்ள பள்ளி, கல்லூரிக்கும், மந்தைவெளி கிராமத்திற்கும் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். அதேபோல் விவசாயிகளின் விளை பொருட்களையும் இந்த சாலை வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அஞ்செட்டி ஒகேனக்கல் சாலையில் இருந்து சித்தாண்டபுரம் செல்லும் சாலையை சீரமைத்து தார் சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;