districts

கல்வி நிலையங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு சிபிஎம் கண்டனம்

கிருஷ்ணகிரி, அக். 22- அரசின் கல்வி நிலையங்க ளில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதியளிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. கிருஷ்ணகிரியிலுள்ள சந்தியா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் கோ.கண்ணன் தலை மையில் ‘தெய்வீகமும் தேசிய மும் உணர்வோம் உணர்த்திடு வோம்’ என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்திற்குள் தமிழ் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை (அக். 21) கருத்தரங்கம் நடைபெறு கிறது. இதில் இந்துத்துவா, ஆர்எஸ்எஸ், பாஜகவின் கருத்தாளர்கள், கல்வியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள் என்று அழைப்பிதழில் குறிப்பப் பட்டிருந்தது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் பொறுப்பு செயலாளர் ஜி.கே நஞ்சுண்டன் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி யர், மாவட்ட கல்வி அலுவ லர்கள், காவல்துறை அதிகாரி களை சந்தித்தனர். அப்போது, அந்த நிகழ்ச்சிக்கு அனு மதியளித்தற்கு கண்டனம் தெரி வித்தனர். மேலும், அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினர். மேலும், இகுறித்து தமிழக அரசிற்கும், முதலமைச்ச ருக்கும் புகார் தெரிவிப்போம் என்றும் எச்சரிக்கைவிடுத்தனர். பிறகு,  அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக மாவட்டக் கல்வி அலுவலர்கள்அறிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டில்லிபாபு,“தமிழகம் முழுவதும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்கள், கருத்தரங்கம் நடை பெறுவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். கல்வி நிலையத்தில் இதுபோன்ற மதவாத கருத்தரங்கம் நடத்த அனுமதியளித்த கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

;