districts

img

அரசு விடுதி மாணவர் மர்ம மரணம் ஊத்தங்கரையில் நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி, ஆக.10- ஊத்தங்கரை அரசு விடுதியில் மாணவர் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழகத்தில் கல்வி நிறு வனங்களில், விடுதிகளில் மாணவர்களின் மர்மமான முறையில் இறக்கும் நிலை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. திரு வண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தொட்டி மடுவு கிராமத்தில் வசிக்கும் ஆனந்தன் மகன் கோபாலகிருஷ்ணன் (17) ஊத்தங்கரை அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி யில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி இரவு 9 மணியள வில் மாணவர் கோகுல கிருஷ்ணன் மர்மமான முறையில் விடுதியில் இறந்துள்ளார். ஞாயி றன்று உடற்கூறாய்வு செய்யப்பட்டு பெற்றோர்களி டம் அவரின் உடல் ஒப்படைக் கப்பட்டது. மாணவர் இறப்பில் சந்தேகம் உள்ள தாக பெற்றோர்கள் தெரி விக்கின்றனர். தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது இந்நிலையில் தனி யார், அரசு பள்ளி, விடுதி களில் நடைபெறும் மர்ம மரணங்களை தடுத்திட கண்காணிப்பு நட வடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும், விடுதி யில் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்த வேண்டும், மாணவர் மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும், மாணவரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது. வட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்டத் தலை வர் சதீஷ், மாவட்டச் செய லாளர் இளவரசன்,  நிர்வாகி கள் சந்தோஷ், அரிகரன், விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் பேசினர்.

;