india

img

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து பெட்ரோலிய அமைச்சகம் முன்பு வாலிபர்கள் போராட்டம்...

புதுதில்லி:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து பெட்ரோலியத்துறை  அமைச்சகம் முன்பு செவ்வாய்க்கிழமையன்று வாலிபர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச சந்தை நிலவரத்தைக் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை தினந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசு மக்களைப் பற்றி கவலைப்படாமல், எண்ணெய் கம்பெனிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.எரிபொருள் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து தலைநகர் தில்லியில் மகளிர் காங்கிரசார்சாலையில் சமையல் செய்தும், இளைஞர் காங்கிரசார் சட்டைகளை கழற்றி நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கைகளில் பதாகைகளை ஏந்தி  மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

;